பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த விவாகரத்து நடிகை தற்போது இருக்கும் இடம் தெரியாமல் இருக்கிறார். எப்பொழுதும் சோசியல் மீடியாவில் போட்டோக்கள், வீடியோக்கள் போன்றவற்றை பகிர்ந்து வரும் நடிகை சமீப காலமாக எந்த போட்டோ சூட்டும் செய்யாமல் அமைதியாக இருக்கிறாராம்.
இப்படி பொதுவெளியில் எங்கும் செல்லாமல் முடங்கி கிடந்த நடிகை தற்போது வெளிநாட்டிற்கு பறந்துள்ளார். என்னவென்று விசாரித்து பார்த்ததில் நடிகைக்கு மீண்டும் அந்த விசித்திர நோய் வந்து விட்டதாம். அதாவது நடிகை நடிக்க வந்த புதிதில் தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளால் அவதியுற்றார்.
இதனால் எந்த படங்களிலும் நடிக்க முடியாமல் சிகிச்சை பெற்று வந்த நடிகை அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்தார். மிகவும் அரிதாக சிலருக்கு மட்டுமே வரும் அந்தப் பிரச்சனை நடிகைக்கு வந்ததில் அவருடைய சினிமா வாழ்க்கையே ஆட்டம் காணும் அளவுக்கு சென்றது.
எப்படியோ அந்த சர்ச்சைகளில் இருந்து வெளிவந்த நடிகை தற்போது பல மொழிகளிலும் ரவுண்டு கட்டி நடித்து வருகிறார். அவர் நடிப்பில் உருவான திரைப்படம் அடுத்ததாக வெளிவர இருக்கும் நிலையில் அவருக்கு மீண்டும் அந்த பிரச்சனை பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also read:நடிகையுடன் ஜாலி ரைடு போன நடிகர்.. பஞ்சாயத்தை கூட்டி பொங்கிய மனைவி
இதனால் அதிர்ந்து போன நடிகை தற்போது சிகிச்சைக்காக வெளிநாட்டுக்கு சென்றுள்ளார். இது திரை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை கிளப்பிய நிலையில் நடிகைக்கு நெருக்கமானவர்கள் சாதாரணமாக தான் அவர் வெளிநாட்டிற்கு சென்றுள்ளார் என்று கூறி வருகின்றனர்.
இந்த ட்ரீட்மென்ட் விசயம் வெளியில் கசிய கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் நடிகை படு சீக்ரெட் ஆக தன்னுடைய பிரச்சனையை சரி செய்து வருகிறாராம். என்ன தான் ரகசியமாக வைத்திருந்தாலும் தற்போது இந்த விஷயம் வெளியில் கசிந்து விட்டது.
Also read:எல்லாரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டை தான்.. பெரிய அந்தஸ்துள்ள நடிகைகளை கிழித்து எரியும் பஜாரி நடிகை