ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

வளர்த்து விட்டவர்கள் எல்லாம் கை விரித்த பரிதாபம்.. மொத்த சருக்களுக்கு காரணமாய் அமைந்த ரஜினியின் படம் 

ஒரு காலத்தில் முன்னணி நடிகர்களை வைத்து சூப்பர் ஹிட் படங்கள் கொடுத்து இயக்குனர் இப்பொழுது வாய்ப்புகள் சரிவர அமையாமல் காத்துக் கொண்டிருக்கிறார். இயக்குனர், திரைக்கதை ஆசிரியர், திரைப்பட தயாரிப்பாளர் என பன்முகத் திறமை கொண்ட இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர்.

இவர் அஜித்தின் தீனா படத்தில் மூலம் இயக்குனராக அறிமுகமாகி, அதன் பிறகு விஜயகாந்தின் ரமணா, சூர்யாவின் கஜினி, விஜய்யின் துப்பாக்கி உள்ளிட்ட டாப் ஹீரோக்களின் படங்களை இயக்கியுள்ளார். இப்படி சினிமாவில் விஜய், அஜித் வளர்வதற்கு காரணமாய் இருந்த இவர், இப்பொழுது பெரிய ஹீரோக்களை விட்டு விட்டு அதற்கு அடுத்த கட்டத்தில் இருக்கும் நடிகர்களை நாடி வருகிறார்.

Also Read: 300 கோடி வசூல் செய்தும் விஜய்யை சந்தி சிரிக்க வைத்த தயாரிப்பாளர்.. இப்படியா அவமானப்படுத்துவது?

இவர் படத்தை அங்கே காப்பியடித்து விட்டார் இங்கே காப்பியடித்து விட்டார் என்றெல்லாம் கூறி இவரை வளர விடாமல் செய்துவிட்டனர். கடைசியாக இப்பொழுது சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படத்தை இயக்கவிருக்கிறார் ஏஆர் முருகதாஸ்.

இவர் கடைசியாக 2020 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தர்பார் படத்தை இயக்கியதால் தான் இவர் இப்பேர்பட்ட  நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளார். சூப்பர் ஸ்டார் படமே சரியாக போகவில்லை என இவரை ஒதுக்கி விட்டனர். 

Also Read: ரஜினி, விஜய்க்காக நடக்கும் போர்.. இணையத்தையே அல்லோலப்படுத்தும் மட்டமான செயல்

பல வெற்றி படங்களை கொடுத்த இயக்குனராக மட்டுமல்லாமல், முன்னணி நடிகர்களின் வளர்ச்சிக்கு காரணமாக இருந்த ஏஆர் முருகதாஸ், வளர்த்து விட்ட நடிகர்கள் எல்லாம் வாய்ப்பு கொடுக்காமல் கைவிரித்த பரிதாபமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

இருப்பினும் இவர் அடுத்ததாக சிவகார்த்திகேயனை வைத்து இயக்கக்கூடிய படம் மட்டும் சூப்பர் ஹிட் ஆனது என்றால், நிச்சயம் இவரது இயக்கத்தில் அடுத்தடுத்து விஜய் அஜித், ரஜினி உள்ளிட்டரின் படங்களை இயக்குவதற்கான வாய்ப்பு கிடைக்கும் என்றும் நம்புகிறார். 

Also Read: மொத மொதல்ல சினிமால அத உடைச்சது தலைவர் தான்.. ரஜினியின் ரகசியத்தை உடைக்கும் நட்டி

Trending News