வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

சூப்பர் ஸ்டாருக்கு ஹிட் கொடுத்த சுந்தர் சி.. அடுத்தடுத்து மண்ணை கவ்விய 5 படங்கள்

இயக்குனர் மணிவண்ணனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த இயக்குனர் சுந்தர் சி அவருக்கே உரித்தான கலகலப்பான படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் வெற்றி பெற்றவர். குறுகிய காலத்திலேயே ரஜினி, கமல், கார்த்திக், பிரசாந்த், அர்ஜூன், சரத்குமார் மற்றும் அஜித் குமாருடன் இணைந்து படம் பண்ணினார். . உள்ளத்தை அள்ளித்தா, அருணாச்சலம், அன்பே சிவம் படங்கள் இவரது இயக்கத்தில் குறிப்பிடத்தக்க படங்கள் ஆகும். இப்படி ஹிட் மேல் ஹிட் கொடுத்த சுந்தர் சிக்கு போறாத காலம் போல் அவர் இயக்கத்தில் அடுத்தடுத்து வெளியான படங்கள் பிளாப் ஆகி வருகின்றன.

1.லண்டன்: ‘காக்கா குயில்’ என்னும் மலையாள படத்தின் ரீமேக் படம் தான் ‘லண்டன்’. இந்த படத்தை பத்ரியின் எழுத்தில் , சுந்தர் சி இயக்கியிருந்தார். இந்த படத்தில் பிரசாந்த், பாண்டியராஜன், வடிவேலு, அங்கிதா, மும்தாஜ், நளினி ஆகியோர் நடித்திருந்தனர். வடிவேலுவின் நகைச்சுவை காட்சிகள் ரசிக்கும்படி அமைந்தாலும் படம் எதிர்பார்த்த அளவுக்கான வெற்றியை பெறவில்லை.

Also Read: சுந்தர் சி-க்கு ஆட்டம் காட்டும் இளம் இயக்குனர்.. 6 மடங்கு அதிகமான வசூலால் ஷாக்கான திரையுலகம்

2.வந்தா ராஜாவாதான் வருவேன்: ‘ அத்தாரிண்டிகி தாரேதி’ என்னும் படத்தின் மறுஉருவாக்கம் தான் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’. சுந்தர் சி இயக்கத்தில் 2019 ஆம் ஆண்டு இந்த படம் ரிலீசானது. சிலம்பரசன், காத்ரீன் தெரெசா, ரம்யா கிருஷ்ணன், பிரபு, நாசர், மஹத் ராகவேந்திரா, யோகி பாபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்களை வைத்து எடுத்திருந்தாலும், படம் வெற்றி பெறவில்லை.

3.தக திமி தா: சுந்தர் சி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு ரிலீசான திரைப்படம் தக திமி தா. முழுக்க முழுக்க காதலை மையமாக கொண்ட இந்த படம் சுந்தர் சி க்கு தோல்வி படமாகவே அமைந்தது. இந்த படத்தில் யுவ கிருஷ்ணா, அங்கிதா, விவேக், மனோபாலா, பரவை முனியம்மா ஆகியோர் நடித்திருந்தனர்.

Also Read: சுந்தர் சி இயக்கிய 35 படங்களில் நடித்த ஒரே நடிகர்.. 2 படங்களை மட்டும் மிஸ் செய்த காரணம் இதுதான்

4.அழகர்சாமி: சத்யராஜ் நடிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் 2000 ஆம் ஆண்டு ரிலீசான திரைப்படம் அழகர்சாமி. இந்த படத்தில் ராதாரவி, வினு சக்ரவர்த்தி, பொன்னம்பலம், ரோஜா, சுஜாதா, கவுண்டமணி, செந்தில் ஆகியோர் நடித்திருந்தனர். குடும்ப பின்னணியை கொண்ட கதை என்றாலும் படம் அந்த அளவுக்கு ரசிகர்களிடம் எடுபடவில்லை.

5.காபி வித் காதல்: சுந்தர் சி இயக்கத்தில் சமீபத்தில் ரிலீசான திரைப்படம் காபி வித் காதல். ஜெய், ஜீவா, ஸ்ரீகாந்த் இந்த படத்தில் நடித்திருக்கின்றனர். இன்றைய காலத்தின் காதலை நகைச்சுவை கலந்து சொல்ல முயற்சி செய்திருக்கிறார் இயக்குனர் சுந்தர் சி. ஆனால் திரைக்கதையில் சுவாரஸ்யம் இல்லாததால் இந்த படத்தின் ரிவியூக்கள் நெகட்டிவாக அமைந்துவிட்டது.

Also Read: ரிலீஸ் அன்றே மண்ணை கவ்விய சுந்தர் சி.. பாசிட்டிவ் ரிப்போட்டால் லவ் டுடேக்கு அடித்த லக்

Trending News