வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

அஜித்-விஜய்யால் அல்லோலப்படும் டாப் இயக்குனர்கள்.. ஈகோவால் அழியும் தமிழ் சினிமா

முன்னணி நடிகர்களான அஜித் மற்றும் விஜய் ஆகியோரது ஈகோ, வளரும் மற்றும் வளர்ந்த இயக்குனர்களை எவ்வாறு பாதிக்கிறது என்பதை பார்க்கலாம். தமிழ் சினிமாவில் அஜித்தும், விஜய்யும் சமகாலத்து போட்டியாளர்கள். அவர்களது படங்கள் வெளிவரும்போது திரையரங்கங்கள் திருவிழா காட்சி அளிக்கும். இந்த அன்பு பல சமயங்களில் எல்லை கடந்து போவதும் உண்டு.

பொது இடங்களில், சமூக வலைத்தளங்களில் என்று இவர்கள் மோதிக்கொள்வதும் உண்டு. இது ஒருபுறம் இருக்க, மறுபுறம் இவர்களை சார்ந்து இருக்கும் இயக்குனர்கள், இசை அமைப்பாளர்கள், கேமராமேன் போன்ற டெக்னீஷியன்கள் கூட இவர்களால் பாதிக்கப்படுகிறார்கள். அப்படிதான் இவர்களால் சில இளம் மற்றும் முன்னணி இயக்குனர்கள் கூட பாதிக்கப்பட்டுள்ளார்கள். பெரும்பாலும் அஜித் தனக்கு வசதியாய் இருக்கும் இயக்குனர்களுடன் அதிகம் பயணம் செய்வது வழக்கம். அந்த லிஸ்டில் விஷ்ணுவர்தன், சிறுத்தை சிவா, எச்.வினோத் போன்றோரை சொல்லலாம்.

Also Read : அண்ணன் விஜய்யின் பார்முலாவை காப்பி அடிக்கும் லோகேஷ்.. போட்டி போட்டு பணத்தை வாரி இரைக்க திட்டம்

இவர்களது காம்போவில் படம் வெற்றி பெறுதோ இல்லையோ, அவர்கள் தொடர்ந்து அஜித்துடன் இணைந்து பணி செய்வார்கள். மறுபக்கம் விஜய் அவர்களுடன் தொடர்ந்து இயங்கி வருபவர்கள் அட்லீ, முருகதாஸ், தற்போது லோகேஷ். இவர்கள் தளபதியுடன் பல விஷயங்களில் ஒத்துப்போவதால் தொடர்ந்து படங்களை வெற்றிப்படங்களாக கொடுத்து வருகிறார்கள். இதனை லியோ படத்திற்கு கிடைத்திருக்கும் வரவேற்பை பார்த்தாலே புரியும்.

இப்படி இரு முன்னணி நடிகர்கள் தொடர்ந்து ஒரு சில இயக்குனர்களுடன் மட்டுமே பணியாற்றுவது ஒரு பக்கம் நல்லதாக தோன்றினாலும், மறுபக்கம் அதனால் உண்டாகும் பாதிப்புகளும் இல்லாமல் இல்லை. இவர்களுடைய ஈகோ பல திறமைகளை வளரவிடாமல் செய்கின்றது. மேலும் திறமையான இயக்குனர்கள் தங்கள் படைப்புகளை சுதந்திரமாக இயக்க முடியாமல் ஹீரோசியத்துக்காக படம் எடுக்க வேண்டிய நிர்பந்தத்துக்கு தள்ளப்படுகிறார்கள்.

Also Read :ரிவெஞ் எடுத்தே ஆவேன்.. அஜித்தை தோற்கடிக்க விக்னேஷ் சிவன் போடும் கூட்டணி

தொடர்ந்து விஜய், அஜித் ஆகிய இருவரும் சில இயக்குனர்களுடன் மட்டுமே பயணிக்கும்போது அவர்களால் ஓர் திரைப்படத்தை சீக்கிரம் முடிக்க இயலாமல் போவது நடைமுறை. அதற்கு காரணம், பெரிய நடிகர்களின் படம் என்றால் படப்பிடிப்பு, இசை கோர்ப்பு, போஸ்ட் ப்ரொடக்சன், விளம்பரம் என்று அதிகப்படியான நாட்கள் பிடிக்கின்றது. அதே போல புதுமையான இயக்குனர்களுக்கு இவர்கள் வாய்ப்பளிக்கவும் மறுக்கிறார்கள். இதனால் தமிழ் சினிமாவில் புதுமைகள் தோன்றுவது அவ்வபோது நடக்காமல் குறிஞ்சிமலர் போன்று அரிதாகவே நடக்கிறது.

தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திய திரைப்படங்களில் முக்கியமானவையாக நாம் கருதுவது சுப்ரமணியபுரம், முண்டாசுப்பட்டி, பிஸ்ஸா, மாநகரம் போன்ற படைப்புகளே. இதன் மூலம் பிரபலமான இயக்குனர்கள் தொடர்ந்து நல்ல படங்கள் கொடுப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்பதே நமது கருத்தாக இருக்கிறது.

Also Read :லைக்காவை மிரளச் செய்த அஜித்தின் கட்டளை.. கட் அண்ட் ரைட்டாக செக் வைத்த ஏகே

Trending News