புதன்கிழமை, ஜனவரி 1, 2025

எல்லாத்துக்கும் காரணம் அந்த இளம் நடிகர் தான்.. வேர்ல்ட் ஹீரோவை கோபப்படுத்திய இயக்குனர்

Gossip: பல வருடமாக வெளிவர முடியாமல் சிக்கலில் இருந்த பிரம்மாண்ட படம் ஒரு வழியாக திரைக்கு வருகிறது. இதற்காக தயாரிப்பு தரப்பு செய்த செலவு கொஞ்சம் நஞ்சம் கிடையாது.

அதனாலேயே படத்தை உலக அளவில் ப்ரமோஷன் செய்து லாபம் பார்த்து விட வேண்டும் என தீவிரமாக பட குழு உழைத்துக் கொண்டு இருக்கிறது. ஆனால் வேர்ல்ட் ஹீரோ அது அனைத்திலும் மண்ணை அள்ளி போடும் குறையாக பேசி வருவது சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

படம் வெளி வருவதற்கு இன்னும் சில தினங்களே இருக்கும் நிலையில் நடிகர்கள் அனைவரும் தீவிர ப்ரமோஷனில் இருக்கின்றனர். அதில் வேர்ல்ட் ஹீரோ படம் பற்றி பேசும் ஒவ்வொன்றும் பின்னடைவாக தான் இருக்கிறது.

நடிகரே இப்படி சொல்கிறாரே படம் எந்த அளவுக்கு இருக்குமோ என்ற வெளிப்படையான பேச்சுகளும் கிளம்பிவிட்டது. இதனால் பதற்றம் அடைந்த தயாரிப்பு தரப்பு நடிகருக்கு போன் செய்து கொஞ்சம் அடக்கி வாசிக்க சொல்லி இருக்கிறார்களாம்.

இளம் ஹீரோவால் வந்த ஈகோ

ஆனால் மேடையில் எப்படி பேச வேண்டும் என்பது நடிகருக்கு நன்றாகவே தெரியும். அப்படி இருந்தும் கூட அவர் இப்படி எல்லாம் லூஸ் டாக் விடுவதற்கு காரணம் அந்த இளம் ஹீரோ தானாம்.

ஏற்கனவே படத்தில் அவருக்கு தான் முக்கியத்துவம் இருக்கிறது என்ற கடுப்பு நடிகருக்கு உள்ளது. இதனால் இயக்குனருக்கும் அவருக்கும் கூட ஒரு மெல்லிய மனக்கசப்பு இருப்பதாக திரையுலகில் பேசி வருகின்றனர்.

அதற்கேற்றார் போல் பிரமோஷன் செய்யும் இடத்திலும் இளம் நடிகரின் பேச்சும் அதிகப்படியாக இருக்கிறதாம். இதையெல்லாம் பார்த்து தான் வேர்ல்ட் நடிகர் ஒட்டாதது போல் பேசி தன் அதிருப்தியை காட்டி வருகிறாராம்.

இதனால் தற்போது டென்ஷனில் இருக்கும் இயக்குனர் நிச்சயம் படம் வெளி வந்தால் தன்னுடைய திறமை ரசிகர்களுக்கு புரியும். பழையபடி நம்பர் ஒன் இயக்குனராக ஒரு ரவுண்டு வரலாம் என்ற நம்பிக்கையில் இருக்கிறாராம்.

நடிகரால் டென்ஷனில் இருக்கும் இயக்குனர்

Trending News