வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

5 வருஷமா ஒரு ஹிட் படம் கொடுக்க முடியல.. இதுல விக்னேஷ் சிவனுக்கு ஆறுதல் சொன்ன டஃப் நடிகர்

இளம் இயக்குனரான விக்னேஷ் சிவன் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்திற்கு பிறகு அஜித்தின் ஏகே 62 படத்தை இயக்குவதாக இருந்தது. ஆனால் தன்னுடைய அலட்சியத்தால் அஜித்தின் பட வாய்ப்பை விக்னேஷ் சிவன் இழந்துவிட்டார். இப்போது விக்னேஷ் சிவன் இடத்தில் மகிழ்திருமேனி வந்துள்ளார்.

இதனால் விக்னேஷ் சிவன் உச்சகட்ட கவலையில் உள்ளார். அஜித் படத்தின் வாய்ப்பு பறிபோனது ஒரு பக்கம் இருந்தாலும், டாப் நடிகரின் படத்தில் இருந்து அறிவிப்பு வெளியான பிறகு விலகியதால் அடுத்த பட வாய்ப்பு வருவது மிகவும் கடினம். மேலும் விக்னேஷ் சிவனின் கேரியரே இதன் மூலம் கேள்விக்குறியாக மாறி உள்ளது.

Also  Read : நயன்தாராவால் ஃபெயிலியரான படம்.. மனைவிக்கு வக்காலத்து வாங்கிய விக்னேஷ் சிவன்

அடுத்தது எந்த ஹீரோவை நாடுவது என்று தெரியாமல் புலம்பித் தவித்து வருகிறாராம். இந்த சூழலில் விக்னேஷ் சிவனை டாப் நடிகர் ஒருவர் அணுகி ஆறுதல் கூறியுள்ளார். அந்த ஹீரோவை கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் ஆகியும் ஒரு ஹிட் படம் கூட கொடுக்க வில்லை

அவர் வேறு யாருமில்லை விஜய் சேதுபதி தான். இவருக்கு கடைசியாக சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த படம் என்றால் 96 தான். அதன் பின்பு அவர் பல படங்களில் நடித்தாலும் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு எதுவும் போகவில்லை. மாஸ்டர் மற்றும் விக்ரம் போன்ற படங்களில் அவர் ஹீரோவாக இல்லாமல் வில்லனாக ஜெயித்து காட்டி இருந்தார்.

Also  Read : வீட்டுக்குள்ளே முடங்கிப் போன விக்னேஷ் சிவன்.. தேடி சென்று துக்கம் விசாரிக்கும் பிரபலங்கள்

அதுமட்டுமின்றி அது விஜய் சேதுபதியின் படம் என்று சொல்ல முடியாது. இந்நிலையில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான நானும் ரவுடிதான் மற்றும் காத்து வாக்குல ரெண்டு காதல் படங்களில் விஜய் சேதுபதி தான் ஹீரோவாக நடித்திருந்தார். இதன் மூலம் இவர்கள் இருவருக்கும் பரஸ்பர நட்பு இருந்து வருகிறது.

இதன் காரணமாக தற்போது விக்னேஷ் சிவனுக்கு ஆறுதல் கூறி விஜய் சேதுபதி தேற்றி வருகிறாராம். எனக்கே படம் ஓடி 5 வருஷம் ஆகுது அப்பவும் பீல்ட் அவுட் ஆகாமல் சினிமாவில் நிலைத்து நிற்கிறேன், நீ கவலைப்படாதே என விஜய் சேதுபதி ஆறுதல் சொல்லி உள்ளாராம். மேலும் விக்னேஷ் சிவனுக்கு விஜய் சேதுபதி பட வாய்ப்பு தருவதாகவும் கூறியுள்ளாராம்.

Also  Read : விஜய் சேதுபதியை லாக் செய்த விக்னேஷ் சிவன்.. கேலி கிண்டலுக்கு ஆளாகி வரும் பரிதாப நிலைமை

Trending News