Soori: எந்த ஒரு விஷயத்தையும் நாம் ஜெயித்து விட்டு சொன்னால் அதை உலகம் ஏற்றுக்கொள்ளும் என்று எதிர்நீச்சல் படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் சிவகார்த்திகேயன் சொல்லி இருப்பார். அது யாருக்கு பொருந்துதோ இல்லையோ காமெடி நடிகராக நுழைந்த சூரி தற்போது ஆட்ட நாயகனாக ஜெயித்துக் கொண்டு வருபவருக்கு நன்றாக பொருந்துகிறது.
அதாவது வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த வருடம் விடுதலை படத்தில் நடித்த சூரிக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து விட்டது. அதனால் அதோடு விட்டுவிடாமல் அடுத்த கட்டமாக தொடர்ந்து கதாநாயகனாக வந்த வாய்ப்பை ஏற்றுக் கச்சிதமாக நடிப்பை கொடுத்து தற்போது அனைவரும் திரும்பிப் பார்க்கும் வகையில் ஒரு முன்னணி ஹீரோவாக வளர்ந்து நிற்கிறார்.
வெற்றி பெற்றதை சந்தோசமாக பதிவிட்ட சூரி
அந்த வகையில் விடுதலை படத்தின் வெற்றிக்கு பிறகு ஆர்எஸ் துரை செந்தில்குமார் இயக்கத்தில் சூரி, கருடன் படத்தில் சொக்கன் கேரக்டரில் எதார்த்தமான நடிப்பை கொடுத்து பார்ப்பவர்களை புல்லரிக்க வைத்து விட்டார். இப்படம் 20 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருந்தாலும் லாபம் 50 கோடிக்கு மேல வசூல் ஆகி மக்களிடம் பாராட்டு பெற்று விட்டது.
இதனை தொடர்ந்து பி எஸ் வினோத் ராஜ் இயக்கத்தில் சூரியின் நடிப்பில் உருவான கொட்டுக்காளி திரைப்படம் நேற்று அனைத்து திரையரங்களிலும் ரிலீஸ் ஆகி வெற்றி பெற்று வருகிறது. இதற்கிடையில் இயக்குனர் ராம் இயக்கத்தில் ஏழு கடல் ஏழு மலை படமும் உருவாகி இருக்கிறது. இதற்கிடையில் விடுதலை படத்தின் இரண்டாம் பாகமும் வெளிவர காத்துக் கொண்டிருக்கிறது.
அந்த வகையில் கடந்த வருடம் கதாநாயகனாக அவதரித்த சூரி ஒரு வருஷத்திலேயே நான்கு படங்களை தரமாக கொடுத்திருக்கிறார் என்பது பலரையும் வியக்க வைத்திருக்கிறது. அது மட்டுமில்லாமல் டாப் ஹீரோன்னா இப்படித்தான் இருக்கணும் என்று தில்லாக சவால் விடும் அளவிற்கு ஒரு தரமான சம்பவமும் சூரி மூலம் நடந்திருக்கிறது.
அதாவது ஒரு வருஷத்துல உருவாகின சூரியின் மூன்று படமும் சர்வதேச அளவில் வெற்றி படமாக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. இதைப்பற்றி சமீபத்தில் சூரி அளித்த பேட்டியில் கூறியது என்னவென்றால், கொட்டுக்காளி, ஏழு கடல் ஏழுமலை மற்றும் கருடன் இந்த மூன்று படங்களுமே ஒரே நேரத்தில் ரோட்டர்டேம் சர்வதேச திரைப்பட விழாவில் ஸ்க்ரீன் செய்யப்பட்டிருக்கிறது.
அது மட்டுமில்ல ஒரே ஆண்டில் மூன்று படங்களும் தேர்வாகியது மிகப்பெரிய விஷயம் என சூரி தன்னைத்தானே பாராட்டி பேசி இருக்கிறார். அத்துடன் அங்கு பார்த்தவர்களும் இது என்ன ஒரு படத்தில் நடித்த ஹீரோவே அடுத்தடுத்து மூன்று படங்களிலும் வருகிறார். இவர் இந்தியாவில் மிகப்பெரிய ஹீரோவாக இருப்பாரோ என்று பேசும் அளவிற்கு என்னுடைய புகழ் உயர்ந்திருக்கிறது என்று நினைத்து பார்க்கும்போது ரொம்பவும் பெருமையாக இருக்கிறது.
இதுவரை எந்த ஒரு ஹீரோவுக்கும் கிடைக்காத இந்த மாதிரியான ஒரு அங்கீகாரம் எனக்கு கிடைத்திருக்கிறது என்பது நான் செய்த பாக்கியம். இன்னும் அந்த வகையில் நான் போராட வேண்டியது சாதிக்க வேண்டியது நிறையாக இருக்கிறது என நான் உணர்கிறேன். அந்த வகையில் நான் இப்பொழுது தான் ஹீரோவாக நடிக்கவே ஆரம்பித்து இருக்கிறேன்.
ஆனால் அதற்குள் அவர்களிடம் இருந்து இப்படி ஒரு பாராட்டு கிடைத்ததை பார்க்கும் பொழுது நான் எதையோ பெரிசாக சாதித்தது போல் சந்தோஷமாக உணருகிறேன். இன்னும் தொடர்ந்து இது போன்ற நல்ல படங்களை நடிக்க வேண்டும் என்று நான் கவனத்தில் வைத்து வெற்றி பெறுவேன் என்று சூரி அவருடைய மகிழ்ச்சியான தருணத்தை கூறியிருக்கிறார்.