சினிமா துறையை பொருத்தவரையில் இப்போது பணத்திற்கும், லாபத்திற்கும் தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. அதிலும் டாப் ஹீரோக்கள் பலரும் காசு பணத்திற்கு ஆசைப்பட்டு தமிழ் சினிமாவை அடமானம் வைக்கும் அவலமும் நடந்து வருகிறது. அதாவது தமிழ் சினிமா ஹீரோக்கள் தற்போது தெலுங்கு பக்கம் தங்கள் கவனத்தை திருப்பி வருகின்றனர்.
அந்த வகையில் சமீபத்தில் விஜய் தெலுங்கு இயக்குனர் மற்றும் தயாரிப்பாளருடன் வாரிசு திரைப்படத்தில் கூட்டணி அமைத்திருந்தார். ஆனால் அப்படம் வெளியான முதல் நாளிலேயே கலவையான விமர்சனங்களை பெற்றது. அது மட்டுமல்லாமல் படத்தில் தெலுங்கு வாடை அதிகம் வீசுகிறது என்ற கருத்துகளும் எழுந்தது. இது ஒரு புறம் இருக்க விஜய் எதற்காக தெலுங்கு பக்கம் சென்றார் என்ற கேள்விகளும் எழுந்தது.
உண்மையில் விஜய் மிகப்பெரிய அளவில் ஒரு இன்டஸ்ட்ரி ஹிட்டை கொடுக்க வேண்டும் என்ற ஆசையில் தான் தெலுங்கு பக்கம் சென்றார். ஆனால் அது அவருக்கு மோசமான விளைவுகளை தான் கொடுத்தது. அதேபோன்று சிவகார்த்திகேயனும் பேராசை பட்டு தெலுங்கு இயக்குனருடன் கைகோர்த்தார். கடைசியில் அவர் நடித்த பிரின்ஸ் திரைப்படம் இதுவரை இல்லாத அளவுக்கு மோசமான விமர்சனங்களை பெற்றது.
Also read: லியோவிற்கு பயத்தை காட்ட வரும் ஏகே 62 போஸ்டர்.. எப்ப ரிலீஸ் தெரியுமா?
இந்த வரிசையில் தற்போது தனுஷும் இணைந்து விடுவார் என்ற குரல்களும் ஒழிக்க தொடங்கி இருக்கிறது. ஏனென்றால் நேற்று அவருடைய நடிப்பில் உருவான வாத்தி படத்தின் டிரைலர் வெளியானது. ஆனால் அது எதிர்பார்த்த அளவுக்கு ரசிகர்களை கவரவில்லை. இப்படி தெலுங்கு இயக்குனர்களின் படங்களை தமிழ் ரசிகர்கள் வெறுப்பதற்கு முக்கிய சில காரணங்களும் இருக்கிறது.
அதாவது தெலுங்கு திரைப்படங்களில் எதார்த்தமான காட்சிகள் இருக்காது. அதேபோன்று லாஜிக் மீறல்கள், பார்த்து பார்த்து புளித்து போன மொக்கை கதையாகவும் இருக்கிறது. இதை வைத்து பார்க்கும் போது மலையாள சினிமா எவ்வளவோ மேல் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. ஏனென்றால் அங்கு கம்மியான பட்ஜெட்டில் தரமான திரைப்படங்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது.
Also read: காதல் கணவருக்கு ஏற்பட்ட அவமானம்.. நயன்தாரா எடுத்த அதிரடி முடிவால் அதிர்ச்சியில் திரையுலகம்
அது மட்டுமல்லாமல் அங்குள்ள முன்னணி ஹீரோக்களே சில கோடிகளில் தான் சம்பளம் வாங்குகின்றனர். ஆனால் தமிழ் சினிமாவில் இப்போது டாப் ஹீரோக்களின் சம்பளங்கள் 100 கோடியை தாண்டி சென்று கொண்டிருக்கிறது. ஒரு ஹீரோவுக்கு இவ்வளவு சம்பளம் என்றால் தயாரிப்பாளர்களின் நிலைமை என்ன ஆகும். அதன் காரணமாகவே முன்னணி ஹீரோக்கள் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கும், தெலுங்கு தயாரிப்பாளர்களுக்கும் படம் பண்ண சம்பாதிக்கிறார்கள்.
அவர்களால் தான் இவ்வளவு சம்பளத்தை கொடுக்க முடியும். இது நிச்சயம் கண்டிக்க தக்க செயலாகும். இது இப்படியே தொடர்ந்தால் தமிழ் தயாரிப்பாளர்கள் எங்கு போய் அவமானப்படுவார்களோ தெரியவில்லை. அதேபோல் தமிழ் ஹீரோக்களும் அவமானப்பட நேரிடும். அதனால் காசுக்காக தன்மானத்தை அடகு வைக்காமல் ஹீரோக்கள் கொஞ்சம் யோசித்து செயல்பட வேண்டும். அப்படி இல்லை என்றால் அவர்களுடைய கேரியரே முடிந்துவிடும் அபாயத்திற்கு சென்று விடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.