செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

தமிழ் சினிமாவின் பஞ்சத்தை போக்கிய 6 நடிகைகள்.. ரசிகர்களின் கனவு கன்னியாக மாறிய பிரியங்கா மோகன்

தற்போது தமிழ் சினிமாவில் பல புதுப்புது கதாநாயகிகள் களம் இறங்கி வருகின்றனர். முன்பெல்லாம் சில குறிப்பிட்ட கதாநாயகிகள் தான் பல வருடங்கள் வரை தமிழ் சினிமாவை ஆட்சி செய்து வந்தனர். ஆனால் இப்போது அப்படி கிடையாது பல நடிகைகள் தமிழ் சினிமாவில் இருக்கும் பஞ்சத்தை போக்கி வருகின்றனர். அவர்களில் ரசிகர்களை கவர்ந்த ஆறு நடிகைகள் பற்றி இன்று காண்போம்.

ராஷ்மிகா மந்தனா கன்னடத்தில் சில திரைப்படங்களில் நடித்துள்ள இவர் தெலுங்கு திரையுலகில் அதிக பிரபலமாக இருக்கிறார். அந்த வகையில் இவர் தமிழில் சுல்தான் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதை தொடர்ந்து இவர் தற்போது தளபதி விஜய்யுடன் இணைந்து வாரிசு திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

பூஜா ஹெக்டே தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழியில் பிரபல நடிகையான இவர் தமிழில் முகமூடி என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். ஆனால் அந்த படம் சரிவர போகாத நிலையில் நீண்ட வருடங்களுக்குப் பிறகு இவர் தற்போது பீஸ்ட் திரைப்படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்துள்ளார். அந்த வகையில் இவருக்கு தமிழில் ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர்.

பிரியங்கா மோகன் டாக்டர் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் அந்த படத்தைத் தொடர்ந்து எதற்கும் துணிந்தவன், டான் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். பார்ப்பதற்கு மெழுகு பொம்மை போல் இருக்கும் இவர்தான் தற்போது இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

ப்ரியா பவானி சங்கர் சின்னத்திரை சீரியல் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமான இவர் தற்போது சினிமாவில் ஹீரோயினாக கலக்கிக் கொண்டிருக்கிறார். இவரின் நடிப்பில் தற்போது யானை திரைப்படம் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதை தொடர்ந்து இவரின் கைவசம் பல திரைப்படங்கள் இருக்கின்றன. இதனால் இவர் இப்போது முன்னணி நடிகை என்ற இடத்தை பிடித்துள்ளார்.

சாய் பல்லவி பிரேமம் திரைப்படத்தின் மூலம் மலர் டீச்சர் ஆக அறிமுகமான இவர் அதை தொடர்ந்து தமிழ், தெலுங்கு என்று பல மொழிகளிலும் நடித்து வருகிறார். கதைக்கு முக்கியத்துவம் தரும் கேரக்டர்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் இவருக்கு திரையுலகில் பல ரசிகர்கள் இருக்கின்றனர்.

கீர்த்தி செட்டி சிறு வயதிலேயே ஹீரோயினாக நடிக்க வந்த இவருக்கு தெலுங்கில் ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். அதைத்தொடர்ந்து இவர் தற்போது பாலா இயக்கத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக தமிழில் அறிமுகமாக இருக்கிறார்.

Trending News