வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

டாப் 6 ஹீரோக்களின் 50வது படங்களின் வெற்றி, தோல்வி நிலவரம்.. லட்சுமியை வச்சு தொக்கா தூக்கிய மகாராஜா

Top heroes 50th movie: பெரும்பாலும் முன்னணி ஹீரோக்களின் 25,50வது படங்கள் பெரிய அளவில் ரசிகர்களால் எதிர்பார்க்கப்படும். சினிமாவில் பல காலம் நீடித்து இது போன்ற எண்ணிக்கையில் படங்களை கொடுப்பது என்பது பெரிய விஷயம். ஆனால் இந்த மாதிரியான வெள்ளி விழா, பொன்விழா படங்கள் ஹீரோக்களுக்கு கை கொடுத்து இருக்கிறதா என்றால் அது மிகப் பெரிய விவாதம் தான்.

ஹீரோக்களின் இது போன்ற முக்கியமான படங்கள் தோல்வி அடைந்ததை எப்போதுமே ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இந்த செய்தியில் கோலிவுட்டின் முக்கியமான ஹீரோக்களின் 50வது படம் வெற்றியா தோல்வியா என்ற உண்மை நிலவரத்தை பார்க்கலாம்.

எம்ஜிஆர்: மக்கள் திலகம் எம்ஜிஆருக்கு நல்லவன் வாழ்வான் படம் தான் 50 ஆவது படம். இந்த படத்திற்கு அறிஞர் அண்ணா கதை எழுதியிருந்தார். பெரும்பாலும் எம்ஜிஆர் படங்கள் என்றால் 150 நாட்களை தாண்டுவது என்பது ரொம்பவும் சாதாரணமான விஷயமாக இருக்கும். ஆனால் நல்லவன் வாழ்வான் படம் என்பது நாட்களிலேயே தியேட்டரில் இருந்து எடுக்கப்பட்டு விட்டது. மேலும் பொருளாதார ரீதியாகவும் இந்த படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.

சிவாஜி: நடிகர் திலகம் சிவாஜிக்கு சபாஷ் மீனா தான் 50 ஆவது படம். இந்த படத்தில் சிவாஜியுடன் இணைந்து சரோஜாதேவி மற்றும் சந்திரபாபு ஆகியோர் நடித்திருந்தார்கள். மேலும் இந்த படத்தில் சிவாஜியை விட சந்திரபாபுவுக்கு சம்பளமும் அதிகம். எம்ஜிஆர் போல் இல்லாமல் சிவாஜிக்கு ஐம்பதாவது படம் பெரிய அளவில் கை கொடுத்தது. படத்தின் வெற்றியை தொடர்ந்து பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது.

ரஜினிகாந்த்: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்கு நான் வாழவைப்பேன் என்ற படம் தான் 50 ஆவது படம். சிவாஜி கணேசன், பண்டரிபாய், கே ஆர் விஜயா என்ற மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்களுடன் இந்த படம் உருவானது. ஓரளவுக்கு டீசன்ட் ஹிட் ஆகத்தான் இந்த படம் இருந்ததே தவிர பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.

கமலஹாசன்: உலகநாயகன் கமலஹாசன் ரொம்ப சின்ன வயதிலேயே சினிமாவுக்கு வந்து விட்டார். இதனால் இவருடைய ஐம்பதாவது படம் இவர் வளர்ந்து வரும் ஹீரோவாகதற்கு முன்பே ரிலீஸ் ஆகிவிட்டது. ரஜினிகாந்த், கமலஹாசன், ஸ்ரீதேவி ஆகியோரதின் நடிப்பில் வெளியான மூன்று முடிச்சு படம் தான் கமலுக்கு 50வது படம். படம் பெரிய அளவில் வெற்றி பெற்றிருந்தாலும் கமலஹாசனுக்கு இந்த படத்தில் கொஞ்சம் சீன்கள் தான் இருக்கும்.

விஜய்: தளபதி விஜய்க்கு 25 மற்றும் 50 ஆவது படங்கள் இரண்டுமே எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. அவருடைய 25வது படமான கண்ணுக்குள் நிலவு கூட ஓரளவுக்கு டீசன்ட் ஹிட் கொடுத்தது. ஆனால் 50 படமான சுறா படம் விஜயின் சினிமா கேரியரில் ஒரு பிளாக் மார்க் என்று தான் சொல்ல வேண்டும். இந்த படம் ரிலீசுக்கு பிறகு விஜய் பெரிய அளவில் சினிமாவில் அடி வாங்கினார்.

அஜித்: ஐம்பதாவது பட விஷயத்தில் அஜித் ரொம்பவும் ராசிக்காரர் என்று தான் சொல்ல வேண்டும். அஜித்தின் 50 ஆவது படமாக வெங்கட் பிரபு இயக்கத்தில் மங்காத்தா ரிலீஸ் ஆனது. இதுவரை நடித்திடாத ஒரு கதாபாத்திரத்தில் அஜித் நடித்திருந்தார். அது மட்டும் இல்லாமல் இந்த படம் தமிழ் சினிமாவின் ஒரு ட்ரெண்ட் செட் ஆகவும் மாறியது.

விக்ரம்: சீயான் விக்ரமுக்கு 50வது படமாக அமைந்தது . இதுவரை விக்ரம் உடலை வருத்திக் கொண்டு நடித்த படங்களிலேயே முக்கியமான படம் இது. இந்த படம் டிவியில் ஒளிபரப்பப்படும் பொழுது பெரிய அளவில் டிஆர்பியை பெறுகிறது. ஆனால் தியேட்டர் ரிலீஸ் பொருத்தவரைக்கும் படம் பொருளாதார ரீதியாக பெரிய அடி வாங்கியது.

விஜய் சேதுபதி: விஜய் சேதுபதியை பொருத்தவரைக்கும் கடந்த சில வருடங்களாகவே அவர் ஹீரோவாக நடிக்கும் எந்த படங்களும் வெற்றி பெறவில்லை. அதனால்யே அவருடைய ஐம்பதாவது படமான மகாராஜா பெரிய அளவில் மக்களிடையே எதிர்பார்க்கப்படவில்லை. ஆனால் நேற்றைய தினம் தான் படம் ரிலீஸ் ஆனது, அதற்குள்ளவே மீண்டும் தன்னுடைய பழைய சிம்மாசனத்தை விட 10 அடி உயரம் தாண்டி அமர்ந்திருக்கிறார் விஜய் சேதுபதி. இந்த வருடம் ரிலீஸ் ஆன படத்திலேயே இந்த படம் பெரிய அளவில் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது. இது போன்ற கேரக்டர்களில் விஜய் சேதுபதியால் மட்டும் தான் நடிக்க முடியும் என அடித்து சொல்லலாம்.

மகாராஜாவாக ஜெயித்த நடிப்பின் ராஜா

Trending News