திங்கட்கிழமை, ஜனவரி 6, 2025

விஜய் டெலிவிஷன் விருதுகளின் மொத்த லிஸ்ட்.. அரங்கையே அதிர வைத்த சூப்பர் ஹிட் சீரியல்

விஜய் டிவியில் பிரம்மாண்டமாக விருது வழங்கும் நிகழ்ச்சி நடந்து முடிந்துள்ளது. இதில் சீரியல்கள் மற்றும் ரியாலிட்டி ஷோக்களில் சிறந்தவர்களை தேர்ந்தெடுத்து விருதுகள் வழங்கிக் தெரிவிக்கப்படுகிறது. இந்த ஆண்டு ரசிகர்களை கவர்ந்த பல பிரபலங்கள் விருதுகளை வென்றுள்ளனர்.

இதில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் சிறந்த சீரியல் என்ற விருதை பாக்கியலட்சுமி தொடர் பெற்றுள்ளது. மேலும், இத்தொடரில் சிறந்த நடிகைக்காக சுசித்ரா, சிறந்த வில்லன் நடிகர் சதீஷ், சிறந்த துணை நடிகைகாக ரேஷ்மா பசுபலேட்டி, சிறந்த துணை நடிகருக்காக விஷால், சிறந்த தந்தைக்கான விருது ரோஸரி மற்றும் சிறந்த டைரக்டர் விருதை பாக்கியலட்சுமி தொடரின் இயக்குனர் டேவிட்டும் பெற்றார்.

இதற்கு அடுத்தபடியாக மதியநேர தொடர்களில் சிறந்த சீரியல்காண விருதை தென்றல் வந்து எண்ணை தொடும் தொடர் பெற்றுள்ளது. அதேபோல், விஜய் டிவியில் ஒளிபரப்பான ஃபேவரட் ஷோ என்ற விருதினை மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை பெற்றது. சிறந்த தொகுப்பாளர் பெண் மற்றும் ஆண் பிரிவுகளில் பிரியங்கா மற்றும் ரக்சன் பெற்றுள்ளனர்.

மேலும், குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமான செஃப் தாமு மற்றும் வெங்கடேஷ் பட் இருவரும் சிறந்த ட்ரெண்டிங் ஜோடி என்ற அவார்டை பெற்றனர். சிறந்த சின்னத்திரை ஜோடிக்கான விருதை தமிழம் சரஸ்வதியும் தொடரில் நடித்துள்ள தீபக் மற்றும் நக்ஷத்ரா இருவரும் வென்றுள்ளனர்.

இதற்கு அடுத்தபடியாக ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் சிறந்த நடிகருக்கான விருதை கதிர் ஆக நடித்து வரும் குமரன் தங்கராஜன் வென்றுள்ளார். சிறந்த மாமியார் விருதை ராஜா ராணி 2 தொடரில் சிவகாமியும், சிறந்த மருமகள் என்ற விருதினை மௌனராகம் ரவீனாவும் பெற்றுள்ளார்.

மேலும், சிறந்த மகனுக்கான விருதை ராஜா ராணி 2 தொடரில் சரவணனாக நடித்து வரும் சித்து பெற்றார். ஆனால் இத்தொடரில் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் பொழுதும் படப்பிடிப்புக்கு வந்த ஆல்யா மானசாவுக்கு விருது கிடைக்காதது அவரது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், விருதுகள் பெற்றவர்களுக்கு சினிமாபேட்டை சார்பாக வாழ்த்துக்கள்.

Trending News