வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

பல கோடியில் புரளும் தமன்னா.. 33 வயதில் மில்க் பியூட்டியின் மொத்த சொத்து மதிப்பு

 Tamannaah Net Worth: ஜெயிலர் படத்தில் வெளியான காவாலையா பாடலுக்குப் பிறகு தமன்னாவின் மார்க்கெட் உச்சத்தை தொட்டுள்ளது. தன்னுடைய 15 ஆவது வயதிலேயே சினிமாவில் நடிக்க வந்தவர் தான் தமன்னா. தமிழில் முதல் படத்திலேயே வில்லிக்கு உண்டான தோரணையுடன் தமன்னா நடித்த படம் கேடி. அடுத்ததாக வெளியான வியாபாரி படமும் தோல்வியை சந்தித்தது.

இதைத் தொடர்ந்து சுதாகரித்துக் கொண்ட தமன்னா அடுத்ததாக நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்தார். அப்படிதான் கல்லூரி, அயன், பையா போன்ற அடுத்த அடுத்த ஹிட் படங்களை கொடுத்து வந்தார். அதுவும் தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துக் கொண்டிருந்தார்.

Also Read : ரெண்டு வாரத்தில் இந்தியளவில் வசூலில் அலப்பறை செய்த ஜெயிலர்.. தலை சுற்ற வைக்கும் தமிழ்நாடு கலெக்ஷன்

ஆனால் திடீரென அவரது மார்க்கெட் சரிய தொடங்கிய நிலையில் அக்கட தேசத்திற்கு சென்றுவிட்டார். பாலிவுட்டில் நிறைய படங்கள் நடித்துக் கொண்டிருந்த தமன்னா சமீபகாலமாக ஓவர் கவர்ச்சி காட்ட ஆரம்பித்து விட்டார். சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான வெப் சீரிஸ் சர்ச்சைக்கு உள்ளாகி இருந்தது. ஆனால் அதுவே அவரது மார்க்கெட்டையும் தூக்கி விட்டது.

இந்நிலையில் கிட்டத்தட்ட 17 வருடங்களாக சினிமாவில் இருக்கும் தமன்னாவின் சொத்து மதிப்பு வெளியாகி இருக்கிறது. வருடத்திற்கு 12 கோடி சம்பாதிக்கும் தமன்னா ஒரு படத்திற்கு 4 முதல் 5 கோடி சம்பளமாக பெற்று வருகிறாராம். இது தவிர விளம்பரங்களில் நடித்தும் நல்ல வருமானம் பார்த்து வருகிறார் தமன்னா.

Also Read : அவங்க 2 ஹீரோக்கள் இல்லன்னா நான் ஜீரோ தான்.. தமன்னா சர்வதேச அளவில் ட்ரெண்டாக காரணம் இதுதான்

இப்போது படங்களில் ஐட்டம் நடனம் ஆடுவதற்காக 60 லட்சம் சம்பளம் வாங்குகிறார். 33 வயதில் தமன்னாவின் மொத்த சொத்து மதிப்பு கிட்டத்தட்ட 110 முதல் 120 கோடி என கூறப்படுகிறது. அதோடு மட்டுமல்லாமல் உலகிலேயே விலை உயர்ந்த ஐந்தாவது மதிப்பு மிக்க வைரம் தமன்னாவிடம் இருக்கிறதாம்.

இதன் விலை மட்டும் கிட்டத்தட்ட 2 கோடிகள் இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த ஆண்டு தமன்னாவின் மார்க்கெட் ஏற்றத்தை சந்தித்து வருவதால் அவரது சம்பளமும் அதிகபடியாக உயர்ந்து இருக்கிறது. இதனால் விரைவில் அவரது சொத்து மதிப்பும் இன்னும் பல கோடி உயரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Also Read : ஐட்டம் பாட்டுக்கு இத்தனை கோடியா.? ஜெயிலர் படத்துக்காக தமன்னா வாங்கிய சம்பளம்

Trending News