வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

2023-ல் முதல் நாளில் அதிகம் வசூல் செய்த 5 படங்கள்.. ரஜினியின் பழைய ரெக்கார்டை உடைத்த லியோ தாஸ்

Top 5 movies First Day Collection: முதல் நாள் முதல் ஷோ என்பது இந்திய சினிமாவில் தற்போது மிகப்பெரிய அளவில் ட்ரெண்டாகி விட்டது. எந்த நடிகருக்கு எப்டி எப் எஸ் ஷோவில் அதிக வசூல் ஆகிறது என்பதை இப்போதெல்லாம் போட்டியாகவே மாறிவிட்டது. அப்படி இந்த வருடத்தில் முதல் நாள் முதல் ஷோவில் அதிக லாபத்தை அடைந்த ஐந்து படங்களை பற்றி பார்க்கலாம்.

முதல் நாளில் அதிக வசூலை பெற்ற ஐந்து படங்கள்

லியோ: லியோ முதல் நாள் முதல் ஷோ வசூல் இந்திய சினிமாவையே அதிர்வடைய செய்து விட்டது. பெரும் பரபரப்புகளுக்கு இடையே ரிலீஸ் ஆன இந்த படத்தின் முதல் ஷோ வசூல் 148.50 கோடியாகும். கடந்த அக்டோபரில் ரிலீஸ் ஆன இந்த படத்திற்கு பிறகு வெளியான எந்த படமும் இந்த கணிசமான மதிப்பை தாண்டவில்லை. பிரபாஸ் நடிப்பில் வெளியாக இருக்கும் சலார் படம் இந்த வசூலை முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆதிபுருஷ்: இந்த வருடத்தில் ரிலீசான படங்களில் அதிக நெகட்டிவ் விமர்சனத்தை பெற்ற படம் என்றால் அது பிரபாஸ் நடிப்பில் வெளியான ஆதிபுருஷ் தான். ராமாயண கதையை மையமாகக் கொண்டு வெளியான இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் முதல் நாள் வசூலில் சாதனை படைத்திருக்கிறது. லியோ படத்திற்கு அடுத்து இரண்டாவது இடத்தில் 140 கோடி வசூலோடு இந்த படம் இருக்கிறது.

Also Read:2023ல் வசூல் வேட்டையாடிய டாப் 5 மூவிஸ்.. 72 வயதிலும் நான்தான் No.1-ன்னு நிரூபித்த ரஜினி

ஜவான்: பிரபல இயக்குனர் அட்லி இந்தியில் அறிமுகமான படம் ஜவான். முதல் படத்திலிருந்து இந்தி சினிமாவில் வெற்றி பெற்றதோடு பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானுக்கு மிகப்பெரிய ஹிட்டை பெற்று தந்திருக்கிறார். இந்த படம் நயன்தாராவுக்கும் இந்தி திரை உலகில் மிகப்பெரிய அறிமுகத்தை கொடுத்திருக்கிறது. இந்த வருடம் ரிலீசான படங்களில் முதல் நாள் வசூலில் 129.60 கோடி பெற்று இது மூன்றாவது இடத்தில் இருக்கிறது.

அனிமல்: ரன்பீர் கபூர் நடிப்பில் ரிலீஸ் ஆகி இருக்கும் அனிமல் படம் மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டது. ரசிகர்கள் எதிர்பார்த்த அளவுக்கு இந்த படம் அமையவில்லை என்றாலும் முதல் நாள் வசூலை கெட்டியாக பிடித்து விட்டது. இந்தப் படத்தின் முதல் நாள் வசூல் 116 கோடி ஆகும்.

பதான்: பாலிவுட் திரையுலகில் அடுத்தடுத்து முன்னணி ஹீரோக்களின் படங்கள் எல்லாம் மண்ணை கவ்விக் கொண்டிருந்தன. அந்த சமயத்தில் ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் இணைந்து நடித்த பதான் படம் மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டது. ஷாருக்கான் தன்னுடைய ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவாக பூர்த்தி செய்திருந்தார். இந்த படம் ரிலீசான முதல் நாளில் 106 கோடி வசூலித்திருக்கிறது.

Also Read:முக்கிய நாளை குறி வைக்கும் ஐஸ்வர்யா, லோகேஷ்.. சிக்காமல் ஓடி ஒளியும் சூப்பர் ஸ்டாரின் ஃபிளாஷ்பேக்

Trending News