Tragedy in Tiruvannamalai: ஒவ்வொரு வருஷமும் மழையின் தாக்கம் சூறாவளி மாதிரி இருப்பதால் ஏதாவது ஒரு அசம்பாவிதம் நடந்து விடுகிறது. ஆனால் இந்த முறை எந்தவித அசம்பாவிதமும் நடந்து விடக்கூடாது என்று அரசு என்னதான் பல முன்னெச்சரிக்கைகள் எடுத்திருந்தாலும் இயற்கை சீற்றத்தின் முன் யாராலும் ஒன்னும் பண்ண முடியாது என்பதற்கு ஏற்ப ஃபெஞ்சல் புயலின் தாக்கத்தால் பலரும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
அதாவது திருவண்ணாமலை மற்றும் சுற்று வட்டார பகுதியில் இரு தினங்களாகவே கனமழை பெய்தது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை அண்ணாமலையார் அடிவாரத்தில் உள்ள வஉசி நகரில் மண் சரிவு ஏற்பட்டு இருக்கிறது. ராட்சத பாறைகள் உருண்டு விழுந்ததால் அங்கே இருந்த ராஜ்குமார் என்பவரின் வீடு மண்ணில் புதைந்திருக்கிறது.
இதில் அந்த வீட்டில் இருந்த ஏழு பேர் காணாமல் போனதாக தகவல் வெளியானது. அந்த வகையில் ஐந்து குழந்தைகள் உட்பட இரண்டு பெரியவர்கள் வரை தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் உதவியின் மூலம் தோண்டி எடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த அசம்பாவிதத்திற்கு காரணம் சாத்தனூர் அணையை எந்தவித முன் அறிவிப்பு இன்றி திறந்ததால் தான் இப்படி ஒரு பிரச்சினை ஏற்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.
அந்த வகையில் சாத்தனூர் அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றில் எந்த ஒரு முன்னறிவிப்பும் இல்லாமல் நள்ளிரவில் 1.68லட்சம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டதாக தான் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது.