புதன்கிழமை, ஜனவரி 22, 2025

கங்கை நதிக்கு அடியில் ரயில் தண்டவாளம்.. மர்ம வழியை பார்த்து அதிர்ந்த மக்கள்

ஹரித்வாரில் பாயும் கங்கை நதிக்கு நீர் கொண்டுவரப்படும் கங்கை கால்வாய் மூடப்பட்டதை அடுத்து ஹர் கி பைடி மற்றும் விஐபி படித்துறைகளில் நீரின்றி வறண்டு காணப்படுகிறது. இது அவ்வப்போது நடக்கும் நிகழ்வு தான். அப்படி வறண்டு காட்சியளிக்கும்போது படித்துறைகளின் அடிவாரம் காட்சியளிக்கும்.

அப்படி இந்த முறை படித்துறை தெரிந்த போது, அங்கு தண்டவாளம் தெரிந்துள்ளது. இது மக்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியதோடு, இங்கு எப்படி தண்டவாளம் வந்தது? ஒரு வேலை இந்த பாதையில் ரயில் ஓடி இருக்குமா என்று பல குழப்பத்தை கொடுத்தது.

இந்தப் படித்துறையில் இருந்து 3 கி.மீ தொலைவில் தான் ஹரித்வார் ரயில் நிலையம் உள்ளது. இதனால், படித்துறை இருக்கும் இடத்தில் முன்பு சிறிய ரயில்கள் ஓடியதாக சிலர் பேசுகிறார்கள். ஆனால் உண்மை அது அல்ல.

தண்டவாளத்தின் வரலாறு

ஹரித்வாரைச் சேர்ந்த ஆதேஷ் தியாகி இதுதொடர்பாக பேசுகையில், “1850 ஆம் ஆண்டு கங்கை கால்வாய் கட்டும் போது, ​​கட்டுமானப் பொருட்களை எடுத்துச் செல்ல கை வண்டிகள் பயன்படுத்தினாராம். கை வண்டிகள் இந்த இரும்பு வழித்தடங்கள் வழியாக கொண்டுச் செல்லப்பட்டன” என்றுள்ளார்.

அதனால் தான் அங்கு இரும்பு தண்டவாளமுள்ளது. மேலும் ஒரு சிலர் கூறும் மற்றொரு கூற்று என்னவென்றால், “கங்கை கால்வாய் டல்ஹவுசி பிரபுவின் முக்கிய திட்டங்களில் ஒன்று. இது அப்போதே பொறியாளர் கோட்லே மேற்பார்வையில் கட்டப்பட்டது. இதுபோன்ற பல பெரிய கட்டுமானங்கள் ஆங்கிலேயர் காலத்தில் உருவாக்கப்பட்டன.” என்றும் கூறுகிறார்கள்.

இவ்விரண்டில் எது உண்மை என்பது இது வரை சரியாக விளக்கவில்லை. ஆனால் கண்டிப்பாக அங்கு ரயில் போல ஒரு வண்டி ஓடியது மட்டும் உறுதி.

Trending News