வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

பிக்பாஸ் வீட்டிற்குள் நமிதா போல செல்லும் அடுத்த திருநங்கை.. பத்து நாளாவது தாக்கு பிடிப்பாங்களா!

வரும் அக்டோபர் 9ஆம் தேதி மாலை 6 மணிக்கு பிக் பாஸ் சீசன் 6 துவங்க இருப்பதால், இதில் யார் யார் போட்டியாளர்களாக பங்கேற்கின்றனர் என ரசிகர்கள் ஆர்வத்துடன் தெரிந்து கொள்கின்றனர். இன்னிலையில் பிக்பாஸ் வீட்டில் நடந்து முடிந்த 5-வது சீசனின் முதல் முதலாக திருநங்கை நமிதா மாரிமுத்து கலந்துகொண்ட பிக்பாஸ் நிகழ்ச்சியை சூடு பிடிக்க வைத்தார்.

அவரை தொடர்ந்து தற்போது பிக் பாஸ் சீசன்6 நிகழ்ச்சியிலும் இரண்டாவதாக திருநங்கை ஒருவர் கலந்து கொள்கிறார். ஏற்கனவே நமிதா மாரிமுத்து மீது பெரும் எதிர்பார்ப்பில் இருந்த ரசிகர்கள் அவர் கலந்து கொண்ட சில நாட்களிலேயே திடீரென்று உடல்நிலை குறைவால் வெளியேறினார்.

Also Read: நமிதாவிற்கு முத்தம் கொடுத்த பிக்பாஸ் போட்டியாளர்.. அடிச்சு துரத்தியும் அடங்க மாட்டீங்களா

ஆனால் தற்போது பிக் பாஸ் சீசன் 6ல் திருநங்கை சிவின் கணேசன் கலந்து கொள்ள உள்ளார். வீட்டிற்கு ஒரே பையனாக வளர்ந்த இவர் திருநங்கையாக மாறியது அவருடைய குடும்பத்திற்கு பிடிக்காததால் வேலை தேடி சிங்கப்பூர் சென்றார்.

அங்கு சில ஆண்டுகள் பணிபுரிந்த சிவின் கணேசன், பின்னர் மீண்டும் இந்தியா வந்தார். ஆனால் இவர் திரும்பி வந்ததை அவருடைய வீட்டில் ஏற்றுக்கொள்ளவில்லை, அத்துடன் அவர் தன்னுடைய அம்மாவை கூட சந்திக்க வில்லை.

shivin-ganesan-cinemapettai
shivin-ganesan-cinemapettai

Also Read: நான் தான் அடுத்த சில்க் என அலட்டிக் கொண்ட 6 நடிகைகள்.. வேஸ்ட் பீஸ் என தூக்கி எறிந்த தமிழ் சினிமா

ஆகையால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பதன் மூலம் இதுவரை தன்னிடம் பேசாத அம்மா பேசுவார் என்ற எதிர்பார்ப்பில் பிக் பாஸ் சீசன் 6ல் கலந்து கொள்கிறார். திருநங்கைகள் தற்போது பல்வேறு துறைகளில் முன்னிலை வகித்து வரும் நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் சிவின் கணேசன் கலந்து கொள்வதன் மூலம் சமூகத்தில் பல மாற்றம் நிகழும் எனவும் எதிர்பார்க்கின்றனர்.

முன்பு நமிதா மாரிமுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் பாதியிலிருந்து விலகியது சிலருக்கு ஏமாற்றத்தை அளித்தது என்பதால் இரண்டாவது முறையாக 20 போட்டியாளர்களில் ஒருவராக மீண்டும் திருநங்கை சிவின் கணேசனை வீட்டிற்குள் அனுப்பி தங்களுடைய டிஆர்பியை எகிற வைக்க போகிறது விஜய் டிவி.

Also Read: நமிதா வெளியேறியதற்கு இதுதான் காரணமா? உண்மையை உடைத்த ஐக்கி பெர்ரி!

Trending News