செவ்வாய்க்கிழமை, ஜனவரி 14, 2025

Suchithra: விஜய் பெயரை கெடுக்குறதுக்கு த்ரிஷாவை இப்படி பண்ண வச்சாங்க.. அடப்பாவிங்களா! தளபதிக்கு வந்த சோதனை

Suchithra: கூடா நட்பு கேடாய் முடியும் என்று சொல்வார்கள். அது இந்த செய்தியில் வர ஒரு சிலருக்கு சரியா பொருந்தும். தளபதி விஜய் பொருத்தவரைக்கும் அதிகமாக யாருடனும் பெரிய அளவில் பேசிக்கொள்ளாத நபர் தான். அதை தாண்டி தனக்கு நெருக்கமான ஒரு சிலரிடம் அதிக நட்பையும் காட்டக் கூடியவர்.

அந்த லிஸ்டில் இருப்பவர் தான் நடிகை திரிஷா. கில்லி படத்திற்கு பிறகு இவர்களது கூட்டணி பெரிய அளவில் பேசப்பட்டது. அதன் பின்னர் ஒரு சில காலகட்டங்களுக்கு இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கவே இல்லை. மீண்டும் லியோ படத்தின் மூலம் இந்த ஜோடி வெள்ளி திரையில் இணைந்தது.

லியோ படத்தில் திரிஷா நடித்துக் கொண்டிருக்கும் போதே, விஜய் மற்றும் அவருடைய மனைவி சங்கீதா இருவரும் விவாகரத்து செய்யப் போகிறார்கள் என்ற செய்தி ஒன்று வெளியானது. அது மட்டும் இல்லாமல் வெளிநாட்டில் விஜய் மற்றும் திரிஷா ஷாப்பிங் போவது போல் ஒரு சில புகைப்படங்களும் வெளியானது.

விஜய் உடைய சட்டையை தான் த்ரிஷா அணிந்திருக்கிறார் என்று ஒரு புகைப்படம் வைரல் ஆனது. அட எதுக்குடா விஜய்க்கு தோலுக்கு மேல வளர்ந்த பிள்ளை இருக்கும்போது இப்படி எல்லாம் கதை கட்டி விடுறீங்களேன்னு கொஞ்சம் வயித்தெரிச்சலா வந்திருக்கும்.

ஆனா உண்மையில் ஒரு 15 வருடத்திற்கு முன்பே த்ரிஷா மற்றும் விஜய்க்கு நடுவே சம்திங் சம்திங் இருப்பதாக செய்திகள் வெளியாக ஆரம்பித்தது. நடிகர்கள் மற்றும் நடிகைகள் தொடர்ந்து ஒன்று இரண்டு படங்களில் இணையும் போது இப்படி கிசு கிசு வெளியாவது சகஜம் தான்.

ஆனால் அந்த கிசுகிசுவை பயன்படுத்தி விஜய் பேரை கெடுப்பதற்கு பின்னால் ஒரு சதி நடந்து இருப்பது இப்போது தான் வெளியில் வந்திருக்கிறது. 14 வருடத்திற்கு முன்பு சுச்சி லீக்ஸ் என்ற ட்விட்டர் பதிவு மூலம் கோலிவுட் சினிமாவை அதிர வைத்திருந்தார் பாடகி சுசித்ரா.

இவர் கடந்த இரண்டு தினங்களாக ஒரு சில யூடியூப் சேனல்களுக்கு பேட்டிகளை கொடுத்து வருகிறார். அதில் விஜய் மற்றும் திரிஷாவை பற்றி பேசி இருக்கும் விஷயம் தற்போது பெரிய அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. ஒரு குறிப்பிட்ட செய்தியை சொல்லும்போது 90 கிட்ஸ்களுக்கு சட்டென ஆமா இது நடந்துச்சு என்று ஒரு ஞாபகம் வரும்.

அடப்பாவிங்களா! தளபதிக்கு வந்த சோதனை

விஜய் வீட்டு முன்னாடி த்ரிஷா போதையில் டான்ஸ் ஆட கூடிய விஷயம் தான் அது. மொபைல் போன்கள் அதிக புலக்கமில்லாத காலத்தில் அது நடந்ததால் இப்போதைக்கு அந்த விஷயத்துக்கு ஆதாரம் என்று எதுவும் கிடையாது. ஆனால் இப்படி ஒரு விஷயம் நடந்தது என்பது எல்லோருக்குமே சட்டென ஞாபகத்திற்கு வந்து போகும்.

திரிஷா ஏன் அப்படி செய்தார் என சுசித்ரா சமீபத்திய பேட்டி ஒன்றில் சொல்லி இருக்கிறார். ஒரு போதை பார்ட்டியில் த்ரிஷாவை இவ்வாறு செய்ய சொல்லி அவருடைய நண்பர்கள் சொல்லி இருக்கிறார்கள். இதை டேர் கேம் என்று சொல்வார்கள்.

தைரியமாக இந்த விஷயத்தை செய்ய வேண்டும், இல்லை என்றால் நாங்கள் கொடுக்கும் தண்டனையை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதுதான் இது. அப்படி த்ரிஷாவுக்கு கொடுக்கப்பட்ட டேர் தான் விஜய் வீட்டு முன்னாடி டான்ஸ் ஆடுவது. த்ரிஷாவும் போதையில் அவர் வீட்டு முன்னாடி காரை நிப்பாட்டி விட்டு ஆடி இருக்கிறார்.

இது பெரிய அளவில் பேசும் பொருளாகி அதன் பின்னர் இந்த ஜோடி எந்த ஒரு படத்திலும் இணையவில்லை என்பது எல்லோருக்குமே தெரியும். ஆனால் விளையாட்டுக்காக தான் இந்த விஷயத்தை த்ரிஷாவை செய்ய சொன்னார்களா அல்லது விஜயின் பெயரை கெடுப்பதற்கு நடந்த சதியா என்பது அவருடைய நண்பர்களுக்கு தான் வெளிச்சம்.

Trending News