வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

அவ மார்க்கெட்டை குறைக்காமல் ஓய மாட்டேன்.. சபதத்திற்காக திரிஷா எடுத்த விபரீத முடிவு

டாப் நடிகர்களுக்குள் இருக்கும் தொழில் போட்டியை விட இரு ஹீரோயின்களுக்கிடையே இருக்கும் போட்டி தான் மீடியாக்களுக்கு பெரும் தீனியாக அமைந்துவிடுகிறது. அப்படித்தான் நடிகை திரிஷாவும் பல வருடங்களாக முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.

ஆனால் இடையில் அவருடைய மார்க்கெட் அதல பாதாளத்திற்கு சென்ற கதையும் உண்டு. இதற்கு முக்கிய காரணம் இப்போது நம்பர் ஒன் இடத்தை பிடித்திருக்கும் நயன்தாரா தான். அவருடைய வரவிற்கு பிறகுதான் திரிசாவின் மார்க்கெட் கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பித்தது. இதனாலேயே அவர்கள் இருவருக்குள்ளும் தடாலடியான போட்டியும் ஆரம்பித்தது.

Also read: “உயிர் மட்டும் இல்ல, ஹார்ட், லிவர், கிட்னி எல்லாமே உங்களுடையது தேவி”.. த்ரிஷா நடிப்பில் மறக்க முடியாத 5 கேரக்டர்கள்

ஆனாலும் த்ரிஷாவால் விட்ட மார்க்கெட்டை பிடிக்க முடியவில்லை. அதனாலேயே திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிடலாம் என்று முடிவு எடுத்தார். அந்த வகையில் இவருக்கும் மிகப்பெரிய தொழிலதிபருக்கும் நிச்சயதார்த்தம் கூட நடந்தது. இடையில் சில கருத்து வேறுபாடுகளின் காரணமாக அந்த திருமணம் நின்று போனது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் திருமணத்திற்குப் பிறகு திரிஷாவின் கொஞ்ச நஞ்ச மார்க்கெட்டும் முடிந்துவிடும் என்ற பயம் தான் முக்கிய காரணம். அதனாலேயே அவர் துணிந்து இந்த திருமணத்தை நிறுத்தி இருக்கிறார். மேலும் நயன்தாராவை ஓரம் கட்டாமல் திருமணமே செய்து கொள்ள கூடாது என்ற சபதத்தையும் அவர் எடுத்திருக்கிறார்.

Also read: விஜய் த்ரிஷா இணைந்து நடித்த 5 படங்கள்.. 20 வருடங்களாக தொடரும் கெமிஸ்ட்ரி

அதைத்தொடர்ந்து அவர் நயன்தாரா போன்றே ஹீரோயின் சப்ஜெக்ட் கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்தார். ஆனால் அது எதுவும் அவருக்கு கை கொடுக்கவில்லை இதற்கு இடைப்பட்ட கேப்பில் நயன்தாராவின் சம்பளமும் கிடு கிடுவென உயர்ந்தது. இதனால் சோர்ந்து போன திரிஷாவுக்கு கிடைத்த மிகப்பெரும் வாய்ப்பு தான் குந்தவை கதாபாத்திரம்.

அதை கெட்டியாக பிடித்துக் கொண்ட அவர் இப்போது நயன்தாராவையே ஓரம் கட்டி முன்னேறி இருக்கிறார். அந்த வகையில் திருமணத்திற்கு பிறகு வெளியான லேடி சூப்பர் ஸ்டாரின் படங்கள் பெரிய அளவில் வரவேற்பு பெறவில்லை. ஆனால் திருமணத்தை நிறுத்தி நடிப்பில் கவனம் செலுத்திய திரிஷா இப்போது மீண்டும் தன் இடத்தை பிடித்திருக்கிறார். அந்த வகையில் அவர் போட்ட சபதம் இப்போது நிறைவேறிவிட்டது என்பதுதான் உண்மை.

Also read: ரோலக்ஸ் கௌரவத் தோற்றத்தில் நடித்து வெளிவந்த 8 படங்கள்.. த்ரிஷாவுடன் குத்தாட்டம் போட்ட சூர்யா 

Trending News