செவ்வாய்க்கிழமை, நவம்பர் 26, 2024

AI உதவியை நாடிய டிராய்.. மோசடி அழைப்புகள் இனி வருமா? ஜியோ, ஏர்டெல் நிறுவனங்களுக்கு கண்டிஷன்!

வாடிக்கையாளர்கள் மொபைலில் வரும் மோசடி அழைப்புகளில் இருந்து விடுபட ஏர்டெல் ஏஐ தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தவுள்ளது.

போன் அழைப்புகள் மூலம் பண மோசடி

உலகில் தொழில்நுட்ப வளர்ச்சியடைந்துள்ளது. இதன் மூலம் மக்கள் தம் வளர்ச்சியை நோக்கி அடியெடுத்து வைக்கிறார்கள். ஆனால் ஒரு சிலர் இதைத் தவறான வழிகளில் ஈடுபட்டு அப்பாவி மக்களிடம் இருந்து பணத்தை மோசடி செய்கிறார்கள். இதில் படித்தவர், படிக்காதவர் என்ற வேறுபாடியில்லாமல் அனைவரும் ஆன்லைனில், மொபைலில் பணத்தை இழப்பது தொடர்கதையாகி வருகிறது.

சமீபத்தில் கொரியரில் சட்டவிரோத பொருட்கள் உங்கள் பெயரில் சிக்கிக் கொண்டதை. எனவே உங்களிடம் விசாரிக்கிறோம். அதற்கு உங்களின் வங்கி, பான், ஆதார் உள்ளிட்ட விவரங்களைத் தெரிவிக்க வேண்டும், அதன் பின் உங்கள் வங்கியில் உள்ளது உங்களின் பணம் தானா என்பதைச் சரிபார்த்துவிட்டு திரும்ப தருவதாக கூறி, பலரை ஏமாற்றி வரும் மோசடி கும்பல் பற்றி சமீபத்தில் யோகிபாபுவை வைத்து சைபர் கிரைம் போலீஸார் விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டிருந்தனர்.

இப்படி எதாவது ஒரு வழியில் மோசடி என்பது தினமும் எங்காவது நடந்து கொண்டுதான் இருக்கிறது. இந்த நிலையில், ஸ்பேம் மற்றும் தேவையற்ற அழைப்புகளில் யாரும் ஈடுபட விரும்பாத நிலையில், இதற்கு, ட்ரூ காலரில் போன் செய்பவரின் பெயர் வரும், மோசடி அழைப்புகளாக இருந்தாலும் அவை தெரியவரும். இதனால் பலரும் அதைப் பயன்படுத்தி வருகின்றனர். அந்த மாதிரி அழைப்புகளையும் தவிர்க்கின்றனர்.

ஏஐ தொழில்நுட்ப உதவி

சமீபத்தில், இந்த மோசடி அழைப்புகளில் இருந்து பயனர்களைக் காக்க, இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் சில நடவடிக்கைகளை எடுக்க முடிவு செய்தது.டிராய் தலையீட்டின்படி, இந்திய தொலைத்தொடர்பு ஆபரேட்டர்களுக்கு ஏஐ தொழில் நுட்ப உதவி வருகிறது. இந்த ஸ்மாம் அழைப்புகளை கண்டறிந்து தடுக்க ஏஐ உதவியை தேர்வு செய்துள்ளது டிராய்.

இந்த டிராய் அமைப்பு அதன்படி, ஜியோ, ஏர்டெல், ஆகிய நிறுவனங்களை அணுகி, நுகர்வோர் ஸ்பேம் மற்றும் மோசடி அழைப்புகளிடம் இருந்து விடுவிக்க, ஏஐ உதவியை நாடும்படி டிராய் கேட்டுக்கொண்டுள்ளது. மக்கள் பலர் மோசடி அழைப்புகள் மூலம் பெருமளவில் பணத்தை இழந்துள்ளதால், இதை டிராய் தீவிரமாக செயல்படுத்த திட்டமிட்டு வருகிறது.

அதன்படி, டிராய் ஆல் பயன்படுத்தப்படும் ஏஐ கருவி, நுகர்வோர் ஒருவருக்கு வரும் அழைப்பைக் கண்டறிந்து, அந்த எண் ஏற்கனவே பயனருக்கு இடையூறு ஏற்படுத்தியதா என்பதை இதற்கு முந்தைய பதிவுகளுடன் தொடர்பு படுத்திப் பார்த்து, அவர்களுக்கு இனிமேல் குறுஞ்செய்தி வராமல் இருக்க, எண்களைக் தடுக்கும், தெரியாத எண்ணில் இருந்து ஒரு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டால் அதுகுறித்து விசாரணை செய்வர்.

இனிமேல் அழைப்பவரின் பெயர், புகைப்படத்துடன் ஐடி இருக்கும் பட்சத்தில், டிராய் அதைக் கவனிக்கும். ஏர்டெல், ஜியோ ஆகிய உன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இதை செயல்படுத்தி வரும் நிலையில், மற்ற நிறுவனங்களும் இதைச் செயல்படுத்தும் என தெரிகிறது. தொலைத்தொடர்பு துறையில் ஏஐ தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவது இது முதல்முறை என்பதால் இது எவ்வாறு செயல்படும் என்பது இனி வரும் காலங்களில் தெரியவரும்.

- Advertisement -spot_img

Trending News