Alangu Movie Review: கடந்த வாரம் விடுதலை 2 வெளியான நிலையில் வருடத்தின் இறுதி வாரமான இன்று சிறு பட்ஜெட் படங்கள் வெளியாகி இருக்கிறது.
அதில் அன்புமணி ராமதாஸின் மகள் சங்கமித்ரா தயாரித்துள்ள அலங்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. ரஜினி, விஜய் ஆகியோரை சந்தித்து படத்திற்கு கூடுதல் பிரமோஷன் செய்திருந்தார் சங்கமித்ரா.
அதனாலேயே கவனம் பெற்ற இப்படம் எப்படி இருக்கிறது என்பதை ஒரு விமர்சனத்தின் மூலம் காண்போம். சக்திவேல் இயக்கத்தில் குணாநிதி, காளி வெங்கட், செம்பன் வினோத் ஆகியோர் நடித்துள்ளனர்.
ஹீரோ தன் அம்மா தங்கையுடன் மலை கிராமத்தில் வாழ்ந்து வருகிறார். அப்போது ஒரு நாள் இறந்து போன நாயை புதைக்க செல்கிறார்.
ஆனால் நாய் உயிருடன் இருப்பதை பார்த்துவிட்டு தன்னுடன் வளர்க்கிறார். அந்த சமயத்தில் கேரளா எல்லை பகுதியில் வேலை கிடைக்க தன் நாய் மற்றும் நண்பர்களுடன் அவர் அங்கு செல்கிறார்.
மனிதனுக்கும் நாய்க்கும் இடையே உள்ள பாசம்
அங்கு முதலாளியாக இருக்கும் செம்பன் வினோத்தின் மகளை நாய் கடித்து விடுகிறது. இதனால் கோபமடையும் அவர் ஊரில் இருக்கும் எல்லா நாய்களையும் கொல்ல சொல்கிறார்.
அதில் ஹீரோவின் நாயும் சிக்குகிறது. அப்போது நடக்கும் போராட்டத்தில் ரவுடியின் கை வெட்டப்படுகிறது. அதன் பிறகு என்ன நடந்தது தப்பித்த ஹீரோ வில்லனிடம் சிக்கினாரா என்பது தான் படத்தின் கதை.
மனிதனுக்கும் நாய்க்கும் இடையே இருக்கும் பாச பிணைப்பு தான் படத்தின் மையக்கதை. அதை உண்மை சம்பவத்தோடு இணைத்து கொடுத்திருக்கிறார் இயக்குனர்.
அதில் ஹீரோவாக வரும் குணாநிதி இயல்பான நடிப்பை கொடுத்து பாராட்டுகளை பெற்றுள்ளார். அதேபோல் செம்பன் வினோத் வில்லன் சரத் அப்பானி ஆகியோர் கவனம் பெறுகிறார்கள்.
மேலும் திரைக்கதை, இசை படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது. ஆக மொத்தம் எதார்த்தமான படைப்பாக வந்துள்ள இந்த அலங்கு ஒரு முறை பார்க்கக் கூடிய படம் தான்.
சினிமா பேட்டை ரேட்டிங்: 2.5/5