வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

முத்தி போன சண்டை.. முடிவுக்கு வரும் உலக அழகியின் திருமண வாழ்க்கை

Aishwarya Rai Divorce: சாதாரண குடும்பங்களில் கணவன் மற்றும் மனைவிக்கு இடையே சண்டை வரும் பொழுது நாம் அழகாக இருந்தால் கணவர் நம்மிடம் சண்டை போட மாட்டாரோ, போதிய பணம் நம்மிடம் இருந்திருந்தால் இந்த பிரச்சனை எல்லாம் வந்திருக்காது என தோன்றுவது உண்டு. ஆனால் அது எல்லாவற்றையும் வைத்திருக்கும் உலக அழகிக்கு குடும்ப பிரச்சனை என்று சொன்னால் நம்ப முடிகிறதா!.

1994 ஆம் ஆண்டு நடந்த உலக அழகி போட்டியில் இந்தியாவிலிருந்து போட்டியிட்டு பட்டத்தை தட்டிச் சென்றவர் தான் ஐஸ்வர்யா ராய். அதன் பின்னர் நான் நீ என போட்டி போட்டுக் கொண்டு இயக்குனர்கள் அவருக்கு பட வாய்ப்புகளை கொடுத்தார்கள். பின்னர் கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு மேலாக இந்திய சினிமாவை ஆட்சி செய்ததோடு, கோடிக்கணக்கான சொத்துகளுக்கு அதிபதியானார்.

ஒன்று இரண்டு காதல் தோல்விகளுக்கு பிறகு 2007 ஆம் ஆண்டு பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனின் மகன் மற்றும் நடிகர் அபிஷேக் பச்சனை காதலித்து கரம் பிடித்தார். இந்த தம்பதியருக்கு 2011 ஆம் ஆண்டு ஆராத்யா என்ற பெண்ணும் பிறந்தார். திருமணத்திற்கு பிறகு பல மீடியாக்கள் முன்பு அபிஷேக் மற்றும் ஐஸ்வர்யா ராய் சண்டை போட்டு இருக்கிறார்கள்.

Also Read:கெஸ்ட் ரோலுக்கு ரஜினியை டார்ச்சர் பண்ணும் ஐஸ்வர்யா.. லால் சலாம் படத்திற்காக கத்துக்கிட்ட விஷயங்கள்

ஐஸ்வர்யா ராய் மீது இருக்கும் புகழ் வெளிச்சம் தான் அபிஷேக் பச்சன் தாழ்வாக உணர்ந்து, அவரிடம் சண்டை போடுவதற்கு காரணம் என்று கூட சொல்லப்பட்டது. உண்மையில் இருவருக்கும் இருக்கும் பிரச்சனையே அமிதாப்பச்சனின் மனைவி ஜெயா பச்சன் தான். ஜெயா பச்சனை பற்றி எல்லோருக்குமே நன்றாக தெரியும். பெரிய நடிகரின் மனைவி என்பதால் ஏகத்திற்கும், திமிராக பேசும் குணமுடையவர் தான்.

மாமியார் மருமகள் சண்டை

அதே வேலையைத்தான் மருமகள் ஐஸ்வர்யா ராயிடமும் காட்டியிருக்கிறார். பல மீடியாக்கள் முன்பு இவர் ஐஸ்வர்யா ராயை அவமதிப்பதை குறிப்பிட்டு நிறைய செய்திகள் வெளியானது. ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாமல் ஐஸ்வர்யா ராய் அபிஷேக் பச்சனிடம் தனிக்குடித்தனத்தை பற்றி பேசியதாக சொல்லப்படுகிறது. அப்பா மற்றும் அம்மா மீது இருக்கும் அதீத பாசத்தால் அபிஷேக் பச்சன் காதல் மனைவியின் பேச்சை காது கொடுத்து கேட்பதாக இல்லை.

சமீப காலமாக ஐஸ்வர்யா ராய்க்கு அவருடைய மாமனார் மற்றும் மாமியாரிடம் பேச்சுவார்த்தை என்று எதுவுமே இல்லாமல் போய்விட்டதாம். ஒரே வீட்டில் இருந்தாலும் அவர்களிடமிருந்து தன்னை தனிமைப்படுத்திக் கொண்டதாக சொல்லப்படுகிறது. பிடிக்காத வாழ்க்கை என்றாலும் மகள் ஆராத்யா பச்சனின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் இணைந்து வாழ முடிவெடுத்து இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

Also Read:சொந்தத்தில் திருமணம் செய்தும் நடந்த விவாகரத்து.. முதல் கணவரை பிரபு மகள் பிரிய காரணம் இதுதான்

Trending News