வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

TTF வாசன் செய்த குளறுப்பிடியால் காதலிக்கு நேர்ந்த கொடுமை.. விஜய் டிவியை பகைச்சுக்கிட்டா இப்படித்தான் போல

TTF Vasan and Vijay Tv: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோக்களில் மக்கள் அதிக வரவேற்பு கொடுத்து விரும்பி பார்ப்பது குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தான். அதனால் தான் நான்கு சீசன்களை வெற்றிகரமாக முடித்து தற்போது ஐந்தாவது சீசன் ஆக நடைபெற்று வருகிறது. இதில் இரண்டு வாரம் முடிந்த நிலையில் தற்போது இந்த வார எலிமினேஷனுக்கு ஒரு போட்டியாளர் தயாராகி விட்டார்.

அதாவது செப் வெங்கட் பட் வரவில்லை என்றாலும் விஜய் டிவிக்கு இருக்கும் ரசிகர்கள் ஓரளவுக்கு குக் வித் கோமாளிக்கு சப்போர்ட் பண்ணி வந்தார்கள். அதற்குக் காரணம் மாதம்பட்டி ரங்கராஜின் வருகைதான். இருந்தாலும் முதல் வாரம் எதிர்பார்த்த அளவிற்கு இல்லாமல் சொதப்பிவிட்டது. பிறகு எப்படியாவது டிஆர்பி ரேட்டிங்கே பிடித்து விட வேண்டும் என்று புகழ் மற்றும் சுனிதாவை வைத்து காய் நகர்த்தினார்கள்.

தந்திரமாக காய் நகர்த்தி விஜய் டிவி

அந்த வகையில் புகழ் வழக்கம்போல் பெண்களிடம் வலிந்து பேசுவது, நக்கல் அடிப்பது, லவ் டார்ச்சர் கொடுப்பது போன்ற சில்லறைத்தனமான விஷயங்களை பண்ணி வந்தார். அதே மாதிரி டிடிஎஃப் வாசன் காதலி ஜோயாவிடமும் கொஞ்சம் நெருங்கி பழகி கை பிடித்து இழுப்பது, தோளில் கை போடுவது போன்று எல்லை மீறி செய்ததால் டிடிஎஃப் வாசன் கோவப்பட்டார்.

உங்க டிஆர்பிக்காக இந்த மாதிரி வேலைகள் எல்லாம் பண்ணுவதை நிறுத்துங்கள் என்று கண்டனம் தெரிவித்த நிலையில் 2கே கிட்ஸ்கள் அனைவரும் இவருக்கு ஆதரவாக விஜய் டிவியை வறுத்து எடுத்து வந்தார்கள். இதனால் விஜய் டிவியின் இமேஜ் டேமேஜ் ஆகி புகழுக்கும் கெட்ட பெயர் வர ஆரம்பித்துவிட்டது.

அந்த வகையில் இனியும் ஜோயாவை வைத்திருந்தால் இருக்கிற கொஞ்சநஞ்ச மானமும் போய்விடும் என்று விஜய் டிவி பிளான் பண்ணிவிட்டது. அதற்கு ஏற்ற மாதிரி இந்த வரம் டேஞ்சரஸ் சோனுக்கு இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா மற்றும் டிடிஎஃப் வாசனின் காதலி ஷாலின் ஜோயா இருக்கிறார்கள்.

இவர்கள் இரண்டு பேரில் மூட்டை முடிச்சு கட்டிக்கிட்டு வெளியே போவது ஜோயாவாகத்தான் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இங்கேதான் ஒரு டுவிஸ்ட் விஜய் டிவி வைத்துவிட்டது. அதாவது இப்பொழுது ஜோயாவை எலிமினேட் பண்ணி விட்டால் தேவையில்லாத பிரச்சினைகள் தான் இன்னும் வரும். அதனால் விஜய் டிவியின் டிஆர்பி ரேட்டிங் குறைவும் வாய்ப்பு இருக்கிறது.

அதனால் அவரை வச்சு செய்யலாம் என்று ஜோயாவிற்கு பதிலாக ஸ்ரீகாந்த் தேவாவை எலிமினேட் பண்ணி விட்டார்கள்.

Trending News