வெள்ளிக்கிழமை, பிப்ரவரி 21, 2025

கெட்டி மேளம் சீரியலில் மௌனிகாவுடன் டீல் பேசிய துளசியின் அம்மா.. தியா பாப்பாவுக்கு விடுதலை, வெற்றிக்கு கல்யாணம்

Getti Melam Serial: ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வருகின்ற கெட்டி மேளம் சீரியல், புதுசாக ஆரம்பித்து இரண்டு வாரங்களை தாண்டிய நிலையில் தினமும் ஒரு மணி நேரம் எபிசோடு ஒளிபரப்பாகி வருகிறது. ஆனாலும் கொஞ்சம் கூட போர் அடிக்காமல் பார்ப்பவர்களின் மனதை கவர்ந்து வருகிறது. அந்த வகையில் துளசி மற்றும் வெற்றியின் கெமிஸ்ட்ரி தான் மிகப்பெரிய ஹைலைட்டாக மக்கள் விரும்பி பார்த்து வருகிறார்கள்.

இவர்கள் இருவரும் எப்பொழுது ஒன்று சேர்வார்கள் என்று எதிர்பார்த்த நேரத்தில் துளசிக்கு சாதகமாக ஒரு விஷயம் நடக்கப் போகிறது. அதாவது துளசிக்கு பார்த்த கல்யாணம் நின்று போன நிலையில் தியா பாப்பாவை பார்த்துக்கும் பொறுப்பு துளசிக்கு வந்துவிட்டது. ஆனாலும் மௌனிகா குடும்பம் பணத்தாசை பிடித்து தியா பாப்பாவை வீட்டில் இருக்கும் வேலையை செய்து கொடுமைப்படுத்தி வருகிறார்கள்.

இதையெல்லாம் தெரிந்தும் துளசியால் தடுக்க முடியாமல் ஒவ்வொரு நாளும் அவஸ்தைப்பட்டு வந்தார். ஆனால் அதற்கெல்லாம் ஆப்பு வைக்கும் விதமாக மௌனிகா வீட்டிற்கு வந்த லாயர், தியா பாப்பா சின்ன குழந்தை என்பதால் சொத்துக்கள் அனைத்தையும் பாதுகாக்கும் உரிமை துளசியிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.

துளசி கையெழுத்து போட்டால் மட்டும்தான் எல்லாமே செல்லுபடியாகும் என்று சொல்லிய நிலையில் மௌனிகா மற்றும் அவருடைய வீட்டுக்காரருக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்து விட்டது. ஆனாலும் மௌனிகா, துளசிக்கு என் அண்ணனுடன் நிச்சயதார்த்தம் வரை தான் போனது அதுவே நின்று விட்டது. அப்படி இருக்கும் பொழுது அனைத்து சொத்துக்களுக்கு எப்படி அவர் உரிமையாளராக இருக்க முடியும் என்று சண்டை போட ஆரம்பித்து விட்டார்.

ஆனால் லாயர் வேற வழியே இல்லை நீங்கள் அவங்களோட சமாதானமாக போக வேண்டும் என்று சொல்லிவிட்டார். பிறகு துளசியின் அம்மா லட்சுமி, துளசி மற்றும் அண்ணன் அனைவரும் சேர்ந்து மௌனிகா குடும்பத்துடன் பேசுகிறார்கள். அப்பொழுது மௌனிகாவிடம் லட்சுமி போட்ட நிபந்தனை என்னவென்றால் எங்களுக்கு சொத்துக்கள் எதுவும் வேண்டாம். அது அனைத்தையும் உங்களுக்கு வந்து சேரும்படி துளசி கையெழுத்து போட்டு விடுவார்.

ஆனால் அதற்கு பதில் மௌனிகாவை மட்டும் எங்களிடம் ஒப்படைத்து விடுங்கள் என்று துளசியின் அம்மா டீல் பேசினார். ஆனால் மௌனிகா இதுக்கு ஒத்து வராத நிலையில் அதிரடியாக நிபந்தனை போட்டு இதற்கு சம்மதம் என்றால் துளசி கையெழுத்து போடுவார் என்று செக் வைத்து விட்டார். அந்த வகையில் மௌனிகா குடும்பத்தை பொறுத்தவரை சொத்து தான் வேண்டும் என்பதால் தியா பாப்பா கூடிய விரைவில் துளசியுடன் வந்து சேர்ந்து விடுவார்.

இதற்கிடையில் வெற்றிக்கு கல்யாணம் பண்ணலாம் என்று அவருடைய குடும்பத்தில் பொண்ணு பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். ஆனால் வெற்றி மனதில் துளசி இருப்பதால் அவருடைய காதலை எப்படி சொல்வது என்று தெரியாமல் தடுமாறுகிறார். அதே நேரத்தில் துளசி மனதிலும் இடம் பிடிக்க வேண்டும் என்பதால் அவருடைய காதலை சொல்லி துளசியை சீக்கிரத்தில் கல்யாணம் பண்ணி விடுவார்.

Trending News