TVK conference, 15 km traffic jam: விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு இன்று விக்கிரவாண்டி, வி சாலையில் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்வதற்கு ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் கடலென அலைபோல் திரண்டு வந்திருக்கிறார்கள். அதற்காக மாநில முழுவதும் இருக்கும் தொண்டர்கள் இதில் கலந்து கொள்ள வாகனங்களில் வருவதால் விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் வாகன நெரிசல் ஏற்பட்டிருக்கிறது.
இதுபோல தொடர்ந்து மாநாட்டுக்கு தொண்டர்கள் ஏராளமானவர் வந்து கொண்டே இருப்பதால் விக்கிரவாண்டி டோல்கேட்டில் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக முன் ஏற்பாடு பண்ணும் விதமாக மாநாட்டுக்கு வரும் வாகனங்களுக்கு சுங்க கட்டணம் வசூலிக்க கூடாது என ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அத்துடன் மாநாட்டுக்கு வருபவர்களுக்கு தனியாக பாதையும் ஒதுக்கப்பட்டிருக்கிறது.
ஆனாலும் இன்று 11 மணி அளவில் விக்கிரவாண்டி டோல்கேட் மொத்தமாக முடங்கும் நிலையில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதால் போக்குவரத்து முற்றிலுமாக முடங்கி இருக்கிறது. இதனால் போக்குவரத்து மாநாட்டுக்கு செல்லும் சாலையில் இருந்து விக்கிரவாண்டி டோல்கேட் வரை 15 கிலோ மீட்டர் தொலைவில் வாகன போக்குவரத்து முடங்கி இருக்கிறது.
ஆனாலும் இதை கொஞ்சம் கூட பொருட்படுத்தாமல் தொண்டர்கள் பலரும் வாகனங்களில் இருந்து கீழே இறங்கி நடனமாடியும் வாகனத்திற்கு மேல் நடனமாடியும் அவர்களுடைய உற்சாகத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். அத்துடன் மாநாட்டுக்கு போனவர்கள் கொஞ்சம் ஆர்ப்பாட்டம் பண்ணும் அளவிற்கு கூட்டத்துடன் கூட்டமாக ஆர்ப்பரித்து வருகிறார்கள்.
இதை கட்டுப்படுத்துவதற்காக தற்போது புஸ்ஸி ஆனந்த் தொண்டர்களுக்கு சில அறிவுரைகளை கொடுத்து அமைதியாக இருக்க வைப்பதற்கு முயற்சி எடுத்து வருகிறார். இதனால் 4 மணிக்கு மாநாடு தொடங்கலாம் என்று இருந்த நிலையில் தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து இருப்பதால் 3 மணிக்கு தொடங்கி விடலாம் என்று அனைத்து ஏற்பாடுகளும் பரபரப்பாக செய்யப்பட்டு வருகிறது. இன்னும் சில மணி நேரங்களில் விஜய் அவருடைய கொள்கை பற்றிய விஷயங்களை பேச ஆரம்பித்து விடுவார்.