Vijay: இன்று தமிழக வெற்றி கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் நடைபெற்ற வருகிறது. அதில் இதுவரை இல்லாத அளவுக்கு இருந்தது விஜய்யின் ஆவேச பேச்சு.
அதிலும் மாண்புமிகு திரு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே என அவர் ஆளும் கட்சியை நேரடியாக தாக்கி பேசியது யாரும் எதிர்பாராதது தான்.
அவர் பேசியதாவது, பேர மட்டும் வீராப்பா சொன்னா பத்தாது, செயல்லயும் ஆட்சியிலயும் காட்டணும். பாஜக ஆட்சியை பாசிச ஆட்சின்னு அடிக்கடி அறிக்கை கொடுக்குறீங்க.
இங்க நீங்க பண்றது மட்டும் என்ன? ஒரு கட்சி தலைவனா ஜனநாயக முறைப்படி என் கட்சி தோழர்களையும் என் மக்களையும் சந்திக்க தடை போட நீங்கள் யார்?
நான் நினைத்தால் அந்த தடையை மீறலாம். ஆனால் சட்டத்திற்கு கட்டுப்பட்டு அமைதியாக இருக்கிறேன். உங்க ஆட்சியைப் பற்றி கேள்வி கேட்டால் மட்டும் ஏன் உங்களுக்கு எவ்வளவு கோபம்.
விஜய்யின் ஆவேச பேச்சு
உங்க ஆட்சி சரியா இருந்தா பெண்கள் பாதுகாப்பு சரியா இருந்திருக்கும். பச்சை குழந்தைகள் முதல் அனைத்து பெண்களுக்கும் நடக்கும் கொடுமையை சொல்ல முடியவில்லை.
இதுல வேற உங்கள அப்பான்னு கூப்பிடுறாங்கன்னு சொல்றீங்க. தினம் தினம் உங்கள் கொடுமையை அனுபவித்து வரும் என்னுடைய சகோதரிகளான தமிழ்நாட்டுப் பெண்கள் தான் உங்கள் மன்னர் ஆட்சிக்கும் அரசியலுக்கும் முடிவு கட்டப் போகிறார்கள்.
இப்படியாக ஆவேசமாக இருந்தது தளபதியின் பேச்சு. மேலும் நாட்டில் நடக்கும் அத்தனை போராட்டங்களையும் லிஸ்ட் போட்டு பேசினார்.
இதனால் தற்போது மொத்த அரசியல் வட்டாரமும் அதிர்வில் இருக்கிறது. அதேபோல் விரைவில் இதற்கு பதிலடி என்ற பெயரில் பெரும் சம்பவம் நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.