TVK Vijay: தமிழக வெற்றி கழகத்தின் பொதுக்குழு கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. பொதுவாக விஜய் ஏதாவது ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார் என்றாலே மீடியாக்களின் கவனம் அவர் மீது தான் இருக்கும்.
சாதாரண அறிக்கை வந்தாலே ஒட்டு மொத்த அரசியல் பிரபலங்களும் பொங்குவார்கள். அப்படி இருக்கும் போது தற்போது மேடையில் அவருடைய பேச்சு அனல் பறந்து கொண்டிருக்கிறது.
அதிலும் இதுவரை வந்த விமர்சனங்களுக்கு எல்லாம் பதிலடியாக இருந்தது அவருடைய பேச்சு. அதில் ஆளும் கட்சி உட்பட அத்தனை கட்சிகளும் விஜய் பற்றி விமர்சிக்கும் ஒரு விஷயம் நேற்று வந்தவன் எல்லாம் முதலமைச்சர் ஆகணுமா என்பதுதான்.
TVK விஜய் கொடுத்த நெத்தியடி பதில்
முதலில் ஒரு தேர்தலை சந்திக்கட்டும் பத்திரிக்கையாளர்களிடம் பேசட்டும் என பல விமர்சனங்கள் இன்று வரை வந்து கொண்டிருக்கிறது.
அதை குறிப்பிட்ட விஜய் நேற்று வந்தவனுக்கு எல்லாம் முதலமைச்சர் ஆசையா, அது நடக்கவே நடக்காது என்கிறீர்கள். அப்புறம் ஏன் எங்கள் கட்சிக்கு மட்டும் இவ்வளவு நெருக்கடி கொடுக்கிறீர்கள்.
வேறு எந்த கட்சிக்கும் இப்படி தொல்லை கொடுத்தது கிடையாது. முதல் மாநாட்டில் தொடங்கி தற்போது வரை குடைச்சல் தான்.
ஆத்துக்கு அணை போடலாம் காத்துக்கு போட முடியாது. போட்டால் சூறாவளியாக மாறும் இன்னும் புயலாக கூட மாறும் என சிங்கம் போல் கர்ஜித்தார்.
அவருடைய இந்த பேச்சை கேட்ட தொண்டர்கள் கூச்சலிட்டு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். அதைத்தொடர்ந்து ஆளும் கட்சியை அவர் வெளிப்படையாகவே விமர்சித்ததும் குறிப்பிடத்தக்கது.