தமிழ் நாட்டில் வரும் 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கவுள்ளது. இதையொட்டி அனைத்து கட்சிகளும் இப்போதில் இருந்தே தேர்தலுக்கு ஆயத்தமாகி வருகின்றன. கட்சித் தொண்டர்களையும், நிர்வாகிகளையும் தேர்தல் பணிகளில் ஈடுபட வைத்து வருகின்றன.
குறிப்பாக, கடந்த பிப்ரவரியில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியைத் தொடங்கிய விஜய், கொடியையும், கொடிப்பாடலையும் வெளியிட்ட பின், அக்டோபர் 27 ஆம் தேதி பிரமாண்ட மாநாடு நடத்தி அதில், தன் கட்சிக் கொள்கைகளை வெளியிட்டார்.
தவெகவின் கொள்கைகளை விளக்கி விஜய் பேசியதற்கு சீமான் விமர்சித்த நிலையில், ஆட்சியிலும் அதிகார்த்திலும் பங்கு என்பதை விசிகவின் ஆதவ் அர்ஜீனா ஆமோதித்து அவரது கொள்கைக்கு ஆதரவளித்தார்.
இதுகுறித்து விசிகவில் குழப்பம் ஏற்பட்ட நிலையில், சமீபத்தில் பேட்டியளித்த விசிக தலைவர் விஜய்யை சீண்டிப் பேசினார்.தற்போது திமுக கூட்டணியில் இருப்பதால்தான் அவர் விஜய்யை சீண்டியதாக கூறப்பட்டது. அதன்பின் மற்றொரு பேட்டியில், விஜய்யுடன் கூட்டணியா? எனக் கேட்டதற்கு, பொறுத்திருந்து பாருங்கள் எனக் கூலாகச் சொல்லிவிட்டு சென்றார்.
இந்த நிலையில் எல்லோரும்மான தலைவர் என்ற நூல் வெளியீட்டு விழா வரும் டிசம்பர் 6 ஆம் தேதி வெள்ளிக்கிழமை சென்னையில் நடக்கிறது. இதில், விஜய்யுடன் ஒரே மேடையில் திருமாவும் பங்கேற்பதாக தகவல் வெளியானது. அப்போது திமுக, விசிகவை கடிந்து கொண்டதாக கூறப்பட்டது. இதையடுத்துத்துதான் திருமா, விஜய்யை சீண்டினார் என தகவல் வெளியானது.
விசிக விழாவில் விஜய் பங்கேற்பு
இந்த நிலையில் விசிக சார்பில் வெளியிடப்படும் இப்புத்தகத்தை விஜய் வெளியிட்டு சிறப்புரையாற்றவிருக்கிறார். இந்த நூலை முன்னாள் நீதிபதி கே.சந்துரு பெறுகிறார். விகரம் குழும நிர்வாக இயக்குனர் சீனிவாசன் வரவேற்புரை ஆற்றுகிறார். இவ்விழாவில் அம்பேத்கரின் பேரன் ஆனந்த் டெல்டும்டே பங்கேற்கவுள்ளார் என அதிகரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. இதில் நுழைவு அட்டை உள்ளவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
கூட்டணிக்கு அச்சாரமா? இல்லையா?
விஜய் – திருமா இதுவரை அரசியல் ரீதியாக எதிரெதிர் தாக்குதல் தொடுத்ததில்லை. ஆனால் இருவருக்குக்கும் அம்பேத்கர், பெரியாரை தலைவராக ஏற்றுக் கொண்டதால், அரசியலில் யாரும் யாருக்கும் எதிரியில்லை என்பதுபோல் புத்தகம் வெளியீட்டு விழாவுக்காக மட்டும் பங்கேற்பதாக தகவல் வெளியாகிறது.
ஏனென்றால் ஆளுங்கட்சியுடன் விசிக கூட்டணியில் உள்ளதாலும், விசிகவின் நடவடிக்கையை பார்த்துத்தான் அடுத்த தேர்தலில் தொகுகள் ஒதுக்கப்படும் என்பதால், கூட்டணி பற்றி இப்போது முடிவெடுத்தால் அதற்கு திமுக எதிர்வினை ஆற்றும் என்பதால் இது அரசியல் நிகழ்ச்சியாக இருக்காது என பலரும் கூறி வருகின்றனர்.