Vijay: ஒரு விஷயத்தில் வெற்றி பெற வேண்டும் என்றால் எல்லோரும் போகிற பாதையில் போகாமல் புதுயுக்தியை பயன்படுத்தினால் நிச்சயம் வெற்றி உண்டு. அதன்படி தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் மற்றும் நடிகருமான விஜய் அரசியலில் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக புது பாதையில் பயணித்து வருகிறார்.
பிளான் பண்ணி காய் நகர்த்தும் விஜய்
எப்பொழுது அரசியலில் இறங்க வேண்டும் என்று முடிவு பண்ணாரோ, அப்பொழுதே அதற்கான வேலைகளை பார்க்க ஆரம்பித்து விட்டார். அந்த வகையில் எங்கே கை வைத்தால் வெற்றி கிடைக்கும் என்பதை தெரிந்து கொண்டு கடந்த வருடம் பத்தாம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு படித்த மாணவர்களில் அதிக மதிப்பெண் பெற்ற முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பரிசுத்தொகைகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து தற்போது இந்த ஆண்டும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு பரிசு தொகைகளை வழங்க போகிறார். அதற்காக மாவட்ட ரீதியாக பிரித்து இரண்டு நாட்களை குறி வைத்து இருக்கிறார். முதற்கட்டமாக இந்த மாத 28ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று சென்னை திருவான்மியூரில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா கான்வகேஷன் சென்டரில் பாராட்டு விழா நடைபெறப்போகிறது.
இதில் அரியலூர், கோயம்புத்தூர், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி, கரூர், மதுரை, நாமக்கல், நீலகிரி, புதுக்கோட்டை, இராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தென்காசி, தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி, திருப்பூர், விருதுநகர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு ஊக்கத்தொகைகளை கொடுக்கப் போகிறார்.
அடுத்ததாக இரண்டாம் கட்டமாக அடுத்த மாதம் 3ம் தேதி புதன்கிழமை அன்று செங்கல்பட்டு, சென்னை, கடலூர், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், காரைக்கால், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுச்சேரி, ராணிப்பேட்டை, தஞ்சாவூர், திருவள்ளுவர், திருவண்ணாமலை, திருவாரூர், திருப்பத்தூர், திருச்சி, வேலூர், விழுப்புரம் மாவட்டம் சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை கொடுக்கப் போகிறார்.
இந்தப் பாராட்டுக்கள் அனைத்தும் மாணவர்களின் பெற்றோர்களின் முன்னிலையில் வைத்து சான்றிதழ்கள் மற்றும் ஊக்கத்தொகைகளை வழங்கி மாணவ மாணவியர்களை கௌரவிக்கப் போகிறார். அதாவது விஜய் வருகிற 2026 ஆம் ஆண்டு தேர்தலில் நிற்கப் போகிறார் என்பது உறுதியாகிவிட்டது. அந்த வகையில் இந்த மாணவர்கள் சரியாக ஓட்டு போடும் வயதும் கிட்டத்தட்ட நெருங்கி விடும்.
அப்படி என்றால் அவர்களை இப்பொழுதே தன் பக்கம் இழுத்துக் கொண்டால் அவர்களின் ஓட்டு நிச்சயம் நமக்கு கிடைத்துவிடும் என்று புதுப்பாதையில் அரசியலில் கால் தடம் பதித்து வருகிறார்.
அரசியலில் இறங்கிய பின் தளபதியின் செய்திகள்
- விஜய் மீது தலைவருக்கு அப்படி என்ன கரிசனம்
- கட்சித் தலைவராக தளபதி எடுக்கும் அவதாரம்
- விஜய்யை தேடி வந்த அடுத்த பஞ்சாயத்து