செவ்வாய்க்கிழமை, நவம்பர் 5, 2024

2026 சட்டமன்ற தேர்தல் விஜய்யை மைய்யமாக வைத்து தான்.. தளபதியின் வியூகத்தை வெளி கொண்டு வந்த செய்தி தொடர்பாளர்

Thalapathy Vijay: நடிகர் விஜய் அரசியலுக்கு வருகிறார் என்பது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான். எப்போ அறிவிப்பு வரும் என ஒவ்வொரு நொடியும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு கடந்த வெள்ளிக்கிழமை அன்று தளபதி தன்னுடைய அரசியல் பிரவேசத்தை அறிவித்திருந்தார். தமிழக வெற்றிக் கழகம் என்றும் ஆரம்பிக்கப்பட்ட அவருடைய கட்சிப் பெயரின் கீழ்’ பிறப்பொக்கும் எல்லா உயிருக்கும்’ என்ற தன்னுடைய கட்சியின் நோக்கத்தையும் அழுத்தமாக மக்களின் மனதில் பதிய வைத்திருக்கிறார்.

தமிழக வெற்றி கழகத்தின் வியூகம்

தமிழக வெற்றி கழகத்தின் செய்தி தொடர்பாளராக வீர விக்னேஸ்வரன் என்பவர் நியமிக்கப்பட்டிருக்கிறார். அவருடைய சமீபத்திய பேட்டி ஒன்று தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. அந்தப் பேட்டியில் அவர் தளபதியின் அரசியல் நோக்கம் என்பது, மதவாதம் மற்றும் ஊழலை எதிர்ப்பது தான், இதைத்தான் கட்சியின் மீட்டிங்கில் தளபதி எங்களிடம் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி சொல்லி இருப்பது என அவர் கூறியிருக்கிறார்.

அம்பேத்கர், பெரியார், காமராஜர் பெரும் அரசியல் தலைவர்களின் திட்டத்தை வைத்து தான் தமிழக வெற்றிக் கழகம் கட்சி ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. அவர்களுடைய எண்ணங்களை முழுக்க முழுக்க நடைமுறை படுத்துவது தான் தளபதியின் அரசியல் நோக்கமாக இருப்பதாகவும் சொல்லியிருக்கிறார். மேலும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை நோக்கி தான் விஜய்யின் வியூகம் இருக்கிறது.

Also Read:அதிரடியாய் அரசியலில் நுழைந்த தளபதி.. இணையத்தை தெறிக்கவிட்டு கொண்டிருக்கும் மீம்ஸுகளின் கலக்சன்ஸ்

தற்போது நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் விஜய் போட்டியிடாமல் இருப்பதற்கு காரணம், கட்சியின் நோக்கம் தமிழக அரசியல் களத்தை மையப்டுத்தி இருப்பதால் தான். 50 வருட திராவிட கட்சிகளுக்கு எதிரான எழுச்சி தான் தமிழக வெற்றி கழகம் என்றும் அந்த கட்சியின் செய்தி தொடர்பாளர் வீர விக்னேஸ்வரன் சொல்லியிருக்கிறார்.

ஆந்திர மாநிலத்தில் என்டி ராமராவ் தெலுங்கு தேசம் கட்சியை ஆரம்பித்து தேர்தலில் களம் கண்ட போது, முதல் முறையிலேயே 27 ஆண்டு காலம் அந்த மாநிலத்தை ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. தமிழகத்திலும் வரும் 2026 ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் சட்டமன்ற தேர்தல் தளபதி விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தை மைய்யப்படுத்தி தான் இருக்க போகிறது எனவும் வீர விக்னேஸ்வரன் சொல்லியிருக்கிறார்.

மாநில கட்சியாக தமிழக வெற்றி கழகம் இருந்தாலும் மதவாதம் மற்றும் ஊழலுக்கு எதிரான கட்சியாக உருவெடுக்கும் போது கண்டிப்பாக தேசிய கட்சியை எதிர்த்து கேள்வி கேட்க தவற மாட்டோம் என்றும் வீர விக்னேஸ்வரன் தங்கள் கட்சியின் உறுதியான நோக்கத்தை அவர் வலியுறுத்தி சொல்லியிருக்கிறார். விரைவில் தமிழக வெற்றி கழகத்தின் மாநாடு நடக்கவிருப்பதாகவும் செய்திகள் வெளியாகிறது.

Also Read:அடுத்த அரசியல் கட்சிக்கு தயாராகும் ஹீரோ.. விஜய்யை பின் தொடரும் வாரிசு நடிகர்

- Advertisement -spot_img

Trending News