Vijay: பிள்ளை பெறுவதற்கு முன்பே பெயர் வைப்பது என்று சொல்வார்கள். அந்த விஷயம் தான் இப்போது தமிழக வெற்றி கழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது.
தேர்தலை சந்திக்கவே இன்னும் ஒரு வருட காலம் இருக்கிறது. அதற்குள் யாருக்கு என்ன பதவி என்ற போட்டி வந்துவிட்டது.
ஏற்கனவே இந்த பிரச்சனையை சமரசம் செய்ய பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் கூட்டம் கூட்டப்பட்டது.
இந்த நிலையில் ஒவ்வொரு பதவிக்கும் பணம் வாங்குவதாக வாட்ஸ் அப்பில் செய்திகள் பரவியது. அதிலும் இந்த பணம் வாங்கும் விஷயம் புஸ்ஸி ஆனந்திற்கு தெரிந்து தான் நடக்கிறது என்றும் சொல்லப்பட்டது.
சாட்டையை சுழற்றிய விஜய்!
இந்த நிலையில் தான் இன்று பனையூரில் தமிழக வெற்றி கழகம் நிர்வாகிகள் குவிந்திருக்கிறார்கள். இந்த மீட்டிங்கில் கட்சியின் தலைவர் விஜயும் பங்கெடுத்து இருக்கிறார்.
மீட்டிங் ஆரம்பித்து சில மணி நேரத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தை வெளியில் இருக்கும் படி விஜய் சொல்லிவிட்டாராம்.
நிர்வாகிகள் ஒவ்வொருவரையும் கூப்பிட்டு தனியாக பேசி இருக்கிறார்.
மேலும் கட்சியில் ஏதாவது பணப்பட்டுவாடா நடந்தால் கட்சியை விட்டு நீக்கும் அளவுக்கு தண்டனை கடுமையாக இருக்கும் எனவும் எச்சரிக்கப்பட்டு இருக்கிறது.
கட்சியின் பெரிய தூண் போல் இருக்கும் புஸ்ஸி ஆனந்தை வெளியில் அனுப்பும் அளவுக்கு என்ன பிரச்சனை நடந்தது என்பது இதுவரை சரியாக தெரியவில்லை.