200 கோடிக்கு மேல் சம்பாத்தியம் வேண்டாம் என ஒதுக்கிவிட்டு மக்கள் பணியில் இறங்கும் தளபதி விஜய்யின் இந்த அரசியல் பயணத்திற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பிதான் வருகிறது. ஆனாலும் கூட தன்னால் முடிந்ததை செய்து ரசிகர்களான மக்களை தன் வசப்படுத்தி வருகிறார் விஜய்.
முழு அரசியல்வாதியாக மாறிக் கொண்டு வரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் ஆன தளபதி விஜய் தற்போது நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற முக்கியமான புள்ளிகளுக்கு வாழ்த்துக்களை தன் பாணியில் தெரிவித்து வருகிறார்.
ஏற்கனவே பாஜகவிற்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய சந்திரபாபு நாயுடு, நித்திஷ் குமாருக்கு வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார் தளபதி. இவர்கள் இருவரும் மத்தியில் உள்ள முக்கியமான மந்திரி பதவிகளை தன் வசப்படுத்தி கொண்டால் கூட்டணி உறுதி என கிடுக்குப்படியாக உள்ளனர் என்பது விஜய்க்கு மிகவும் பிடித்த சம்பவமாக உள்ளது. இத்தோடு சந்திரபாபு நாயுடுக்கு பக்கபலமாக இருந்த ஆந்திரா மாநிலத்தில் பல போராட்டங்களுக்குப் பிறகு வெற்றி பெற்ற பவன் கல்யாணக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் நாம் தமிழர் கட்சி மற்றும் விடுதலை சிறுத்தை கட்சிகளுக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளதை பாராட்டி தனது வாழ்த்துக்களை இன்று ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தனக்கு பிடித்தமான தலைவர்களை மறைமுகமாக வாழ்த்து கூறி வரும் விஜய் இப்போது புதுவிதமான சிக்கலில் மாட்டி உள்ளார்.
அதாவது தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வெற்றி பெற்ற உறுப்பினர்கள் தங்கள் பணிகளை சிறப்பாக செய்ய வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார். இதில் திமுகவின் பெயரை கூட தெரிவிக்காமலேயே தனது கோபத்தை வெளிப்படுத்தி உள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 40 தொகுதிகளில் வெற்றி கண்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் மேல் உள்ள உச்சகட்ட கோபத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
இதனால் வரக்கூடிய 2026 தேர்தலில் நாம் தமிழர் கட்சி சீமான் மற்றும் விடுதலை சிறுத்தைகளுடன் கூட்டணி வைத்து திமுகவை எதிர்க்க அதிக வாய்ப்பு உள்ளதாக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. நடந்து முடிந்த தேர்தலை வைத்து பார்க்கும்போது அசுர பலத்தில் மழை போல் நிற்கும் திமுகவை எதிர்த்து தமிழக வெற்றி கழகம் ஒரு தொகுதியிலையாவது ஜெயிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.