TVK-Vijay: ஒட்டு மொத்த தமிழகத்தையும் கனமழை புரட்டிப்போட்டு விட்டது. கடலூர் விழுப்புரம் திருவண்ணாமலை என பல மாவட்டங்கள் இந்த மழையால் இயல்பு வாழ்க்கையை இழந்து இன்னமும் தவித்து வருகிறது.

அதேபோல் சில தினங்களுக்கு முன்பு கரையைக் கடந்த ஃபெஞ்சல் புயல் சென்னை புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளையும் பாதித்தது. தற்போது கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் அதிலிருந்து மீண்டு வந்து கொண்டிருக்கின்றனர்.

அதேபோல் அரசு தரப்பில் இருந்தும் பல்வேறு நிவாரணங்களும் உதவிகளும் செய்யப்பட்டு வருகிறது. அது மட்டும் இன்றி அரசியல் தலைவர்கள் பலரும் மக்களை களத்தில் சந்தித்து வருகின்றனர்.
நிவாரண பொருட்கள் வழங்கிய விஜய்
ஆனால் விஜய் அமைதி காத்தது விமர்சனமாக மாறியது. எதற்கெடுத்தாலும் அறிக்கை விட்டு வந்தவர் இப்போது மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் சொல்லவில்லை. களத்தில் இறங்கி வேலை பார்க்கவில்லை.

இப்படி இருந்தால் எப்படி ஆட்சியை கைப்பற்ற முடியும் என வெளிப்படையான கருத்துக்கள் கிளம்பியது. இந்த சூழலில் தற்போது விஜய் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 250க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் செய்துள்ளார்.

பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு பாதிக்கப்பட்டவர்களை வரவழைத்து நிவாரண பொருட்களை அவர் கையாலேயே வழங்கினார். அந்த போட்டோக்கள் அனைத்தும் தற்போது வைரலாகி வருகிறது.
அதேபோல் மக்களுடன் அமர்ந்து அவர் பேசும் போட்டோக்களும் வீடியோக்களும் ட்ரெண்டாகி வருகிறது. இது ஒரு பக்கம் ஆதரிக்கப்பட்டாலும் களத்தில் அவர் ஏன் இறங்கவில்லை என்ற கேள்விதான் பெரிதாக இருக்கிறது.