வியாழக்கிழமை, ஜனவரி 2, 2025

யோகி பாபுவின் அழுத்தமான நடிப்பில் பொம்மை நாயகி.. அனல் பறக்கும் ட்விட்டர் விமர்சனம்

ஒரு காமெடியனாக மட்டுமல்லாமல் கதையின் நாயகனாகவும் ஏராளமான திரைப்படங்களில் நடித்திருக்கும் யோகி பாபு தற்போது பொம்மை நாயகி திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இன்று வெளியான இந்த திரைப்படம் தற்போது பலரின் பாராட்டுகளையும் பெற்று வருகிறது.

நீலம் ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் பா ரஞ்சித் தயாரித்திருக்கும் இந்த திரைப்படத்தை ஷான் இயக்கியுள்ளார். இப்படத்தில் யோகி பாபு உடன் இணைந்து சுபத்ரா, பேபி ஸ்ரீமதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மிகவும் அழுத்தமான கதையாக வெளிவந்திருக்கும் இந்த திரைப்படம் பற்றிய தங்கள் கருத்துக்களை ரசிகர்கள் இப்போது சோஷியல் மீடியாவில் வெளியிட்டு வருகின்றனர்.

bommai-nayagi
bommai-nayagi

Also read: என்னை அசிங்கப்படுத்திய அந்த விஷயம்தான் உயர்த்தியது.. மேடையில் யோகி பாபுவின் கண் கலங்க வைத்த பேட்டி

ஏற்கனவே இப்படத்தின் ப்ரிவ்யூ ஷோவை பார்த்த பல பிரபலங்கள் யோகி பாபுவை தாறுமாறாக புகழ்ந்து தள்ளி இருந்தனர். அந்த அளவுக்கு அவருடைய நடிப்பு மிகவும் யதார்த்தமாக இருக்கிறது என பலரும் கூறி வந்தனர். தற்போது அதையே ரசிகர்களும் தெரிவித்து வருவது படத்திற்கு பக்க பலமாக அமைந்துள்ளது.

bommai-nayagi
bommai-nayagi

அந்த வகையில் இப்படம் அனைவரும் பார்க்க வேண்டிய படம் என்றும் ஒரு ஆழமான பிரச்சனையை அழகாக இப்படம் வெளிப்படுத்தி இருக்கிறது என ரசிகர்கள் கூறுகின்றனர். அது மட்டுமல்லாமல் யோகி பாபு இப்படத்தில் கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார் என்றும் தெரிவித்து வருகின்றனர்.

Also read: யோகி பாபுவின் 200-வது படம்.. மெடிக்கல் மிராக்கலாக வெளியான ஃபர்ஸ்ட் லுக்

இதற்கு முன்னதாக அவர் நடித்திருந்த மண்டேலா திரைப்படம் மிகப்பெரிய அளவில் அவருக்கு பெயர் வாங்கி கொடுத்தது. அந்த லிஸ்ட்டில் தற்போது இந்த பொம்மை நாயகியும் இணைந்து இருக்கிறது. மேலும் படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் மிகவும் தத்ரூபமாக இருப்பதாக ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

bommai-nayagi
bommai-nayagi

அவருக்கு அடுத்தபடியாக பேபி ஸ்ரீமதியும் தன் நடிப்பால் மிரள வைத்திருக்கிறார். அதிலும் நீதிமன்ற காட்சியில் அவர் பேசும் வசனம் பலரின் கைத்தட்டலையும் பெற்றுள்ளது. இதையே ரசிகர் ஒருவர் நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு நடக்கும் காட்சிகள் அனைத்தும் சமூகத்தில் நடப்பவை தான் என்று குறிப்பிட்டு வாழ்த்தி இருக்கிறார். அந்த வகையில் பொம்மை நாயகி திரைப்படத்திற்கு இப்போது பலத்த வரவேற்பு கிடைத்து வருகிறது.

Also read: ரெமோ சிவகார்த்திகேயன் போல புதிய வேடத்தில் யோகி பாபு.. வைரலாகும் பர்ஸ்ட் லுக் போட்டோ

Trending News