செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

ஜெயிலர் வசூலை லியோ முறியடிக்குதோ இல்லையோ, தளபதி 68 உறுதி.. 2 பெரிய கையை வளைத்து போட்ட வெங்கட் பிரபு

Thalapathy 68: தளபதி விஜய் இப்போது லியோ படத்தில் நடித்து முடித்த நிலையில் இப்படம் அக்டோபர் மாதம் வெளியாக இருக்கிறது. இதற்கு முன்னதாகவே ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 படம் உறுதியாகிவிட்டது. ஆனால் இந்த படத்தைப் பற்றி எந்த தகவலும் கூறாமல் சஸ்பென்ஸாக வைத்திருக்கிறார்கள்.

ஏனென்றால் தளபதி 68 படத்தை பற்றிய தகவல் கசிந்தால் லியோ படத்திற்கு பாதிப்பு ஏற்படும் என்பதனால் தான் இந்த ஏற்பாடு நடந்திருக்கிறது. ஆனால் லியோ படத்தை காட்டிலும் தளபதி 68 படத்திற்கு ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பு வைத்திருக்கிறார்கள். இந்நிலையில் பிரியங்கா அருள் மோகன் மற்றும் ஜோதிகா ஆகியோரிடம் இந்த படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

Also Read : விஜய்க்கு சொம்படித்து ரஜினியை கவிழ்த்து விடும் பிரபலம்.. ஜெயிலர் வெற்றிக்கு சொன்ன மொக்கையான காரணம்

இந்த சூழலில் தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்கள் இருவர் தளபதி 68 படத்தில் இணைய உள்ளார்களாம். அதாவது விஜய்யின் போக்கிரி படத்தை இயக்கியவர் தான் பிரபுதேவா. நடன இயக்குனரான இவர் படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இப்போது தளபதி 68 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபுதேவா நடிக்க இருக்கிறாராம்.

இதில் மற்றொரு சுவாரசியமான விஷயம் என்றால் மாதவனும் இந்த படத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. பெண்களின் கனவு நாயகனாக வலம் வந்து கொண்டிருக்கும் மாதவன் சமீபகாலமாக டபுள் ஹீரோ படங்களில் நடித்து வருகிறார். இந்த சூழலில் விஜய்யுடன் அவர் இணைய உள்ளது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Also Read : விஜய்க்கு ஜால்ரா தட்டிய சரத்குமார்.. மேடையிலேயே நோஸ்கட் கொடுத்த சத்யராஜ்

இயக்குனர் வெங்கட் பிரபு மிகப்பெரிய திட்டத்துடன் தான் பிரபுதேவா மற்றும் மாதவன் ஆகியோரை தளபதி 68 படத்தில் நடிக்க வைக்க இருக்கிறார். சமீபகாலமாக பெரிய நடிகர்களின் படங்கள் எல்லாமே மல்டி ஸ்டார் படங்களாக தான் உருவாகி வருகிறது. விக்ரம், ஜெயிலர், லியோ ஆகியவை இந்த வரிசையில் இடம் பெற்று இருக்கிறது.

இப்போது தளபதி 68 படமும் இதே ஸ்டைலில் தான் உருவாக இருக்கிறது. மேலும் வெங்கட் பிரபு எப்போதுமே தனக்கு உண்டான கலகலப்பான ஜானரில் தளபதி 68 படத்தை எடுக்கிறாரா இல்லை மங்காத்தா ஸ்டைலில் எடுக்க உள்ளாரா என்பது விரைவில் தெரியவரும். மேலும் ஜெயிலர் வசூலை லியோ படம் முறியடிக்கிறதோ இல்லையோ உறுதியாக தளபதி 68 முறியடிக்கும் என கூறப்பட்டு வருகிறது.

Also Read : அஜித்-யுவன் சாதனையை முறியடித்த விஜய்.. 5 மடங்கு லாபம் பார்த்த தளபதி 68

Trending News