இன்ப அதிர்ச்சி கொடுத்த சிறுத்தை சிவா, வெங்கட் பிரபு.. அமரனை விடுங்க கடமையை செய்யும் சுல்தான்

சமீபத்தில் இரண்டு இயக்குனர்கள் என்ன ஆனார்கள் என்று தேடி பார்க்கும் போது அதற்குண்டான விடை இப்பொழுது கிடைத்துள்ளது. ஒன்று இயக்குனர் வெங்கட் பிரபு கோட் படத்திற்கு பிறகு என்ன செய்கிறார் என்பது தெரியவில்லை. மற்றொன்று கங்குவா இயக்குனர் சிவா

கங்குவா மற்றும் கோட் இந்த படங்களின் சூட்டிங் நேரத்தில் இவர்கள் இருவரும் சமூக வலைதளங்களில் பேசுபொருளாக இருந்து வந்தனர். ஆனால் அந்தப் இரண்டு படமும் ரிலீஸ் ஆன பின் இவர்களைப் பற்றிய செய்திகள் குறைந்தது. இப்பொழுது இவர்களின் அடுத்த ஸ்டெப் தெரிந்துள்ளது.

சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படம் பண்ண திட்டம் போட்ட வெங்கட் பிரபுவிற்கு இரண்டு வருடங்கள் அவர் பிசி என்று தெரிந்ததும் வேறு கதையை நோக்கி நகர்ந்துவிட்டார். இப்பொழுது சென்னை 28 குழுவினரை வைத்து அடுத்து ஒரு காமெடி படம் இயக்கும் எண்ணத்தில் இருக்கிறார்.

சிறுத்தை சிவாவும் கங்குவா படுதோல்விக்கு பின்னர் துவண்டு போய் இருந்தவர் இப்பொழுது மீண்டும் விட்டதை பிடிக்க உள்ளார். அடுத்து சூர்யா தம்பி கார்த்தியை வைத்து ஒரு படம் இயக்க உள்ளார். இதை சூர்யாவின் உறவினர் தயாரிக்க உள்ளார்.

சிறுத்தை படம் மூலம் இவர்கள் இருவரும் ஏற்கனவே நன்கு பரிச்சயமானவர்கள். ஆரம்பத்திலேயே கார்த்திக்கு பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தவர் சிவா. இவர்கள் கூட்டணியில் உருவான படத்தால் தான் அவருக்கு அந்த பெயரே கிடைத்தது. இப்பொழுது ஏற்றி விட்டவருக்காக இறங்கி அடிக்க போகிறார் கார்த்தி.

thenmozhi

Thenmozhi

தேன்மொழி - கடந்த 8 ஆண்டுகளாக சினிமா தொடர்பான செய்திகளை எழுதி வருகிறார். OTT செய்திகள் மற்றும் விமர்சனங்களில் ஆர்வம் கொண்டவர். உண்மையான மற்றும் பயனுள்ள தகவல்களை கொண்டு சேர்ப்பதே இவரின் குறிக்கோள்.

View all posts →