திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

வைராக்கியத்துடன் சாதித்துக் காட்டிய இரண்டு ஹீரோக்கள்.. செட்டே ஆகாது என்று ஒதுங்கிய கார்த்திக், பிரபு

ஒரு காலகட்டத்தில் ஹீரோவாக கலக்கி வந்த பிரபு மற்றும் கார்த்திக் இப்போது படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டார்கள். பிரபு ஒரு சில விளம்பரங்களிலும் நடித்து வருகிறார். இது தவிர சில படங்களில் முக்கியமான கதாபாத்திரங்கள் அவரை பார்க்க முடிகிறது.

அதேபோல் கார்த்திக்கும் தற்போது வில்லனாக சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்து நடித்து வருகிறார். இப்படி பல ஹீரோக்கள் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். ஆனால் ஹீரோவாக நடித்தவர்கள் இவ்வாறு குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடிக்க தயங்குவார்கள்.

Also Read : நாங்க அதிகம் வாங்கிய சம்பளம் இவ்வளவுதான்.. வெளிப்படையாய் சொன்ன பிரபு, கார்த்திக்

ஆனால் அப்போதைய காலகட்டத்தில் சிவாஜி வயது முதிர்வு காரணமாக சில படங்களில் ஹீரோக்களின் அப்பாவாக நடித்துள்ளார். மேலும் எம்ஜிஆர் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கும்போதே அரசியலில் சென்றதால் அதன் பின்பு சினிமாவை விட்டு ஒதுங்கிவிட்டார்.

இப்போது கார்த்தி, பிரபு, சத்யராஜ் போன்றவர்கள் தனக்கு கிடைத்த கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.ஆனால் நடித்தால் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்று வைராக்கியத்துடன் இரண்டு நடிகர்கள் சாதித்துக் காட்டியுள்ளனர்.

Also Read : கார்த்திக்கு முன்பே பட்டத்தை வென்ற உலகநாயகன்.. இது என்ன புது உருட்ட இருக்கு

முதலாவதாக ராமராஜன் கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு பிறகு சாமானியன் என்ற படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளார். அந்த காலகட்டத்தில் இவருக்கு பல பட வாய்ப்புகள் வந்தாலும் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என உறுதியாக இருந்தார்.

ராமராஜனை போல் மைக் மோகனும் தற்போது ஹரா என்ற படத்தின் மூலம் ஹீரோவாக ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளார்.இந்த படத்தில் மோகனுக்கு ஜோடியாக குஷ்பு நடிப்பதாக கூறப்படுகிறது. இவ்வாறு எத்தனை வருடங்கள் ஆனாலும் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என காத்திருந்து இந்த இரண்டு ஹீரோக்கள் சாதித்துள்ளனர்.

Also Read : ரு காலத்தில் ரஜினியை விட 3 மடங்கு அதிக சம்பளம் வாங்கிய ராமராஜன்.. எந்தப படத்திற்கு தெரியுமா.?

Trending News