Serial: சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியலுக்கு எப்பொழுதுமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும். அதனால் சீரியலுக்கு என்றே சில சேனல்கள் ஏகப்பட்ட நாடகங்களை ஒளிபரப்பு செய்து வருகிறார்கள். அந்த வகையில் சன் டிவி விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் இந்த மூன்று சேனலும் முதல் மூன்று இடத்தில் இருக்கிறது.
அதிலும் சன் டிவி சீரியலுக்குத்தான் முதலிடம் என்பதற்கு ஏற்ப மக்களின் பேவரிட் சேனலாக இடம் பிடித்திருக்கிறது. இரண்டாவது இடத்தில் விஜய் டிவி சீரியல்கள் இருக்கிறது. இந்த சேனல் பக்கத்திலேயே ஒரு சில புள்ளிகளின் வித்தியாசத்தில் மூன்றாவது இடத்தில் ஜீ தமிழ் சீரியல்கள் இடம் பிடித்திருக்கிறது.
அந்த வகையில் எப்படியாவது இரண்டாவது இடத்திற்கு முன்னேறி காட்ட வேண்டும் என்று ஜீ தமிழ் புத்தம் புது சீரியல்களை கொண்டு வந்து கொண்டே இருக்கிறார்கள். அந்த வகையில் தற்போது வரிசையில் ரெண்டு சீரியல்கள் காத்துக் கொண்டிருக்கிறது. அதில் மனசெல்லாம் மற்றும் கெட்டி மேளம்.
இந்த இரண்டு சீரியல்கள் குடும்பங்கள் ஒன்றாக சேர்ந்து பார்க்கும் குடும்ப கதையாக தான் இருக்கப் போகிறது. மேலும் இந்த இரண்டு சீரியலுக்கு பதிலாக தற்போது ஜீ தமிழில் ரெண்டு முக்கியமான சீரியல்கள் முடிவுக்கு வரப் போகிறது. அந்த வகையில் நினைத்தாலே இனிக்கும் என்ற சீரியல் கிட்டத்தட்ட 2021 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது.
அந்த வகையில் சுமார் நான்கு வருடங்களாக வெற்றிகரமாக நினைத்தாலே இனிக்கும் சீரியல் மக்களின் பேவரட் நாடகமாக இருந்திருக்கிறது. இந்த சீரியல் முடிவுக்கு வருவதை ஒட்டி அடுத்த சீரியல் முடியப்போகிறது. நடிகர் மற்றும் பிக் பாஸ் பிரபலமான கணேஷ் வெங்கட்ராமன் நடிப்பில் வந்த நினைத்தேன் வந்தாய் என்ற சீரியல் கடந்த வருடம் ஜனவரி மாதம் தான் ஒளிபரப்பு செய்யப்பட்டது.
அந்த வகையில் ஒரு வருடத்திற்குள்ளே இந்த நாடகத்தை முடிவுக்கு கொண்டு வர முடிவு பண்ணி விட்டார்கள். அத்துடன் இந்த சீரியலின் மிக சிறப்பான விஷயம் என்னவென்றால் கதை என்னவென்றோ அதை மட்டும் நகர்த்தி கொண்டு தேவையில்லாத காட்சிகளை வைத்து இழுத்தடிக்காமல் நாடகத்தை முடிப்பதற்கு தயாராகி விட்டார்கள். இந்த இரண்டு சீரியலுக்கு பதிலாக தான் மனசெல்லாம் மற்றும் கெட்டி மேளம் வரப்போகிறது.