வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

பயில்வான் ரங்கநாதனை மிரட்டும் அந்த 2 நபர்.. கமிஷனர் வரை சென்ற புகார்

சினிமாவின் ஆரம்ப காலத்தில் பத்திரிகையாளராகவும் எம்ஜிஆரின் பாடிகார்ட் ஆகவும் இருந்து திரைப்படத்தில் நடிக்கத் துவங்கிய நடிகர் பயில்வான் ரங்கநாதன், தற்போது யூட்யூப் மூலம் கிசுகிசுக்களை பேசி பெரும் சர்ச்சையை கிளப்பிக் கொண்டிருக்கிறார்.

இவர் இப்படி பேசுவதற்கு காரணம், இவர் பேசும் பேச்சுக்களை பார்ப்பதற்கும் கேட்பதற்கும் என்றே தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது. இருப்பினும் இவரது பேச்சு ஒரு சில சினிமா பிரபலங்களை பாதிக்கத்தான் செய்கிறது. அப்படித்தான் பயில்வான் நடிகைகளைப் பற்றி தொடர்ந்து அவதூறாக பேசுகிறார் என்று இரண்டு முக்கியமான சினிமாவைச் சேர்ந்த பெரும்புள்ளி நடிகைகள் கமிஷனர் ஆபீஸில் கம்ப்ளைன்ட் செய்திருக்கிறார்கள்.

அதில் ஒரு நடிகை தயாரிப்பு நிறுவனம் வைத்திருக்கிறாராம். மற்றொரு நடிகை ஸ்பா மசாஜ் சென்டர் வைத்து பிசினஸ் செய்கிறாராம். இந்த இருவரும் கமிஷனர் ஆபீஸில் பயில்வானை பற்றி புகார் அளித்துள்ளனர்

அந்த புகாரில் அடிப்படையான காரணங்கள் மற்றும் உண்மைகள் ஏதும் இல்லாததால் போலீஸ் தரப்பில் நடவடிக்கை எடுக்க தயங்குகிறார்கள் என்று பயில்வான் ரங்கநாதன் தன் பேட்டியில் கூறியிருக்கிறார்.

தற்போது கூட சாந்தனு பாக்கியராஜ், பயில்வான் தேவையில்லாததை பேசுகிறார் நாம் அதற்கு ஏதாவது சொல்வதால், அவரை வளர்த்து விடுவது போல் ஆகிவிடும் அவர் கூறுவதில் கொஞ்சம் கூட உண்மை இல்லை என்று வெளிப்படையாக நடிகர் சங்க தேர்தல் அன்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன் சினிமா பிரபலங்களும் அடிக்கடி பயில்வான் ரங்கநாதன் அவதூறாகவும் அசிங்கமாகவும் பேசும் பேச்சுக்கு சோசியல் மீடியாக்களில் கண்டனம் தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர். அப்படியும் பயில்வான் ரங்கநாதன் பேச்சில் எந்த மாற்றமும் வராமல் அவருடைய வேலையை எனக்கென்னவென்று பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்.

Trending News