
Vijay Tv Serial: விஜய் டிவியில் மொத்தம் 15 சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் ஐந்து சீரியல்கள் தான் டிஆர்பி ரேட்டிங்கில் அதிக புள்ளிகளை பெற்று மக்களை கவர்ந்திருக்கிறது. முக்கியமாக ஒரு சீரியல் மக்களின் பேவரிட் சீரியல் என்று சொல்லும் அளவிற்கு மகாநதி சீரியலை கொண்டாடி வருகிறார்கள். ஆனாலும் டிஆர்பி ரேட்டிங்கில் ஐந்தாவது இடத்தில் தான் இருக்கிறது.
அதற்குக் காரணம் பிரேம் டைம் கிடைக்காமல் இரவு 6.30 மணிக்கு ஒளிபரப்பு செய்வதால் தான். ஆனாலும் இணையதளத்தை கலக்கும் அளவிற்கு காவிரி மற்றும் விஜயின் கெமிஸ்ட்ரி மக்களை கவர்ந்து VIKA என ரசிகர்கள் தூக்கி கொண்டாடி வருகிறார்கள். அடுத்ததாக புதுசாக நுழைந்த அய்யனார் துணை சீரியலும் மக்களிடம் இருந்து நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
இதற்கு அடுத்தப்படியாக புதுசாக நுழைந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் குடும்பங்கள் கொண்டாடும் அளவிற்கு ஒற்றுமையான பாசத்துடன் கதைகளும் அமைந்திருக்கிறது. இன்னொரு பக்கம் 1000 எபிசோடு தாண்டிய நிலையில் கதை எதுவும் இல்லாமல் அரைத்த மாவை அரைத்துக் கொண்டு பாக்கியலட்சுமி சீரியலை இழுத்தடித்துக் கொண்டு வருகிறார்கள்.
அந்த வகையில் தற்போது இந்த இரண்டு சீரியல்தான் பேசும் பொருளாக கேலியும் கிண்டலும் பண்ணும் அளவிற்கு கதைகள் அமைந்திருக்கிறது. அதாவது என்னதான் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் ஃபேவரிட் சீரியலாக இருந்தாலும் தற்போது அரசியின் காதல் கதை ஒரு வாரமாக இழுத்து அடித்துக் கொண்டு பார்ப்பவர்களை போர் அடிக்க வைக்கிறது.
அதில் தற்போது இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அரசிக்கு மாப்பிள்ளை பார்க்க பாண்டியன் தயாராகிவிட்டார். ஆனால் அரசியின் காதல் விவாகரம் தெரிந்தவுடன் கோமதி முதலில் அரசியை தான் கண்டித்து அடித்து ஆர்ப்பாட்டம் பண்ணினார். அதன் பிறகு தான் குமரவேலுவிடம் பிரச்சனை போனது.
ஆனால் பாக்கியலட்சுமி சீரியலில் இனியாவின் ஐந்தாவது காதல் விவகாரம் தெரிந்த பிறகும் கோபி, இனியாவை எதுவும் கண்டிக்காமல் செழியனை கூட்டிட்டு ஆகாஷை அடித்து துன்புரித்துவிட்டார். இன்னொரு பக்கம் பாக்கியம் இதே வேற மாதிரி சரி செய்ய வேண்டும் என்று செண்டிமெண்டாக பேசி இனியா மற்றும் ஆகாஷ் இடம் சத்தியம் வாங்கிக் கொண்டார்.

ஆனாலும் கோபி, இனிய செஞ்ச காதல் விவாகரத்தால் இனியாவுக்கு கல்யாணம் பண்ணி வைக்கலாம் என்று முடிவு பண்ணினார். ஆனால் இனியா கோபிக்கு ஆப்பு வைக்கும் விதமாக போலீஸ் மூலம் தடுத்து விட்டார். இப்படி இனியா பல குளறுபடிகளை பண்ணினாலும் எந்த தவறும் நான் பண்ணவில்லை என்ற தெனாவட்டில் தான் இருக்கிறார்.
இதனால் இந்த ரெண்டு நாடகத்தையும் வச்சு செய்யும் அளவிற்கு இணைத்தளத்தில் விமர்சனங்கள் வந்து கொண்டே இருக்கிறது. ஒரு குடும்பத்தில் பெண் தவறு செய்தால் அதை எப்படி கண்டித்து தடுக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் கோமதியையும், பாக்கியலட்சுமி சீரியலில் தன் வீட்டு பொண்ணு மீது தவறு இருந்தும் ஆகாஷை அடித்து கஷ்டப்படுத்திய மிருகத்தனமான குடும்பம் பாக்கியலட்சுமி என்றும் ட்ரோல் ஆகி வருகிறது.