வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

விஜய்க்கு சொம்படிக்கும் 2 முரட்டு வில்லன்கள்.. சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தளபதிக்கு வீசும் வலை 

Actor Vijay: கோலிவுட்டில் பாக்ஸ் ஆபிஸ் நாயகனாக ரவுண்டு கட்டிக் கொண்டிருக்கும் விஜய், தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்துக் கொண்டிருக்கிறார். இப்போது லியோ படத்தை முடித்துவிட்டு உடனடியாக வெங்கட் பிரபு  இயக்கும் தளபதி 68 படத்தில் இணைந்துள்ளார்.

இவருடைய படங்களை எல்லாம் தயாரிப்பாளர்களும் பல கோடிகளை கொட்டி எடுக்கின்றனர். காரணம் தளபதியின் படம் என்றால் வசூலும் தாறுமாறாக குவிக்கிறது. இதனால் தளபதியின் பட வாய்ப்பு பெற வேண்டும் என இரண்டு முரட்டு வில்லன்கள் வலை வீசுகின்றனர்.

அதில் ஒருவர் தான் மன்சூர் அலிகான். இவர் லியோ படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்திருக்கிறார். இவர் சமீபத்தில்  அளிக்கும் பேட்டிகளில், என்ன பேசுகிறோம் என்றே தெரியாமல் ரொம்ப எதார்த்தமானவன் என காட்டிக்கொண்டிருக்கிறார்.

Also read: முதல் முறையாக நன்றி விசுவாசத்தை காட்டிய விஜய்.. அரசியல் ஆதாயத்துக்காக புண்ணியம் சேர்க்கும் தளபதி

இவர் குடிக்காத குடி இல்லை, இவர் செய்யாத சேட்டைகள் இல்லை. விஜய் பட வாய்ப்புக்காக காத்திருக்கிறார். இதனால் அவரை ஆஹா ஓகோன்னு சமீப கால பேட்டிகளில் புகழ்ந்து தள்ளுகிறார். இன்னொருத்தர் இயக்குனரும் நடிகருமான மிஷ்கின்.

இவரும் விஜய்யுடன் லியோ படத்தில் வில்லனாக நடித்தவர். இந்த படத்தின் படப்பிடிப்பின் போதே விஜய்யை சந்தித்து அவருக்காக தயார் செய்து வைத்திருந்த பக்கா ஆக்சன் படத்தின் கதையை எப்படியாவது சொல்லி ஓகே வாங்கி விட வேண்டும் என முயற்சித்தார்.

ஆனால் அது நடக்காமல் போனது, இதனால் அந்த படத்தின் கதையில் இப்போது விஜய் சேதுபதியை வைத்து எடுக்கும் முடிவில் இருக்கிறார். இருப்பினும்  விஜய்யை சமீபத்திய பேட்டிகளில் எல்லாம் மிஷ்கின் தூக்கி வைத்து பேசுகிறார். ஏனென்றால் அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பு விஜய் கொடுப்பார் என்ற எண்ணம் தான்.

Also read: லியோ சக்ஸஸ் மீட்டிற்கு வராத சங்கீதா.! பயில்வான் கூறிய சீக்ரெட்டால் வெடிக்கும் சர்ச்சை

Trending News