செவ்வாய்க்கிழமை, பிப்ரவரி 4, 2025

கோபியை பந்தாடும் ரெண்டு பொண்டாட்டிகள்.. முன்னாள் புருஷனை ராதிகா தலையில் கட்ட போராடும் பாக்கியா

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், ராதிகா எடுத்த முடிவு அவசரத்தில் எடுத்ததாகவும் மயுவின் நிலைமையை பற்றி கொஞ்சம் கூட யோசிக்காமலும் கோபியை வேண்டும் என்று முடிவெடுத்து விட்டதாக பாக்கியா நினைக்கிறார். அத்துடன் கோபியும் ராதிகாவை நினைத்து குடித்துவிட்டு புலம்பி தவிக்கிறார். இதனை பார்த்து பாவப்பட்ட பாக்கியம் ராதிகாவிடம் பேசிப் பார்க்கலாம் என்று ராதிகா வீட்டிற்கு போகிறார்.

அங்கே போனதும் பாக்யாவிடம் தன்னுடைய மகளின் நிலைமை இப்படி ஆகிவிட்டது என்று ராதிகாவின் அம்மா புலம்புகிறார். அப்பொழுது பாக்கியா, ராதிகாவின் அம்மாவுக்கு ஆறுதல் சொல்லும் விதமாக நான் பேசிப் பார்க்கிறேன், எல்லாம் சரியாகிவிடும் என்று சொல்கிறார். பிறகு ராதிகாவிடம் நீங்க ஏன் தனியாக வாழ வேண்டும். உங்கள் மேல் அன்பாக இருக்கும் கோபி இருக்கும் பொழுது நீங்க ஏன் இந்த முடிவை எடுத்தீங்க.

வாழ்க்கை பற்றி யோசிக்காமல் அவசரமாக எடுத்த முடிவால் மயூவை பற்றி யோசிக்க மறந்து விட்டீர்கள் என்று சில விஷயங்களை பாக்கியா, ராதிகாவிடம் எடுத்துச் சொல்கிறார். அதற்கு ராதிகா அவருக்கு என்னுடன் வாழ விருப்பம் இருந்தாலும் என் கூட இங்கு வந்து வாழ மாட்டார். அவரை நான் வற்புறுத்தி கூப்பிட்டாலும் என் கூட வந்து விடுவார். ஆனால் நிம்மதியும் சந்தோஷமும் இல்லாமல் தான் இருப்பார்.

அவரால் நானும் சந்தோஷத்தை இழந்து நிம்மதி இல்லாமல் தவிப்பதற்கு அவர் பேசாமல் அவர் இஷ்டப்பட்ட படி அவருடைய குடும்பத்துடனே இருக்கட்டும். நான் என் மகளுடன் நிம்மதியான வாழ்க்கை வாழ்ந்து கொள்வேன். தனியாக என்னால் வளர்க்க முடியாது என்று நினைக்கிறீர்களா? உங்களை பார்த்து தான் நானே தைரியமாக இருக்கிறேன். என்னாலயும் முடியும் என்று பாக்கியவிடம் பதிலடி கொடுக்கிறார்.

பாக்கியவை பொறுத்தவரை ராதிகா விட்டுட்டு போனதால் கோபி இங்கேயே என்கூட இருந்து விடுவாரோ என்ற பயம் இருக்கிறது. அத்துடன் ஈஸ்வரி ஏதாவது தில்லாலங்கடி வேலையை பார்த்து நம்ம தலையில் கட்டி விடுவார் என்ற பயத்தினால் ராதிகாவிடம் எப்படியாவது ஒப்படைத்து விடுவோம் என்று ராதிகாவிடம் பேசி பார்க்கிறார்.

ஆனால் ராதிகா, சுயநலமாகவும் தற்குறியாகவும் இருக்கும் கோபி நமக்கு தேவையில்லை என்று முடிவு பண்ணிய நிலையில் கோபியை விட்டு விலகி இருப்பது நல்லது என பாக்கிய தலையில் ஒப்படைத்து விட்டார். ஆக மொத்தத்தில் இரண்டு பொண்டாட்டிகளும் கோபி நமக்கு தேவையில்லை என்று முடிவு பண்ணி விட்டார்கள்.

மனைவிக்கு துரோகம் பண்ணி சந்தோசத்திற்காக இன்னொரு கல்யாணம் பண்ண கோபிக்கு இதுவும் தேவை இன்னமும் தேவை. இதுதான் ஆரம்பம் இனி தான் கோபி, வாழ்க்கை என்றால் என்னவென்று புரிந்து கொள்ளப் போகிறார்.

Trending News