திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

முத்தக் காட்சியில் நடிக்க மறுத்த உதயநிதி.. அப்பனுக்கு பாடம் சொல்லிக் கொடுத்த வாரிசு

நடிகர், அரசியல்வாதி, தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட உதயநிதி ஸ்டாலின் தற்போது பல திரைப்படங்களை தனது ரெட் ஜெயிண்ட் மூவிஸ் தயாரிப்பு நிறுவனம் மூலமாக திரையரங்குகளுக்கு விநியோகம் செய்து வருகிறார்.

இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் கடைசியாக மாமனிதன் படத்தில் நடித்து முடித்துவிட்டு அரசியலில் முழு நேரமும் கவனம் செலுத்த போகிறார் என்ற செய்தி வெளியானது. ஆனால் மாமனிதன் படத்திற்குப் பிறகு அவரை சினிமாவிலிருந்து விலக விடுவதாக இல்லை.

Also Read: ஸ்டாலின் போட்ட கட்டளை.. கும்பிடு போட்டு விலகும் உதயநிதி

தற்போது உதயநிதி ஸ்டாலின் இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் கலகத்தலைவர் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்த படத்தில் நிதி அகர்வால் கதாநாயகியாக நடித்திருக்கிறார். படத்திற்கு அரோல் கரோலி இசையமைத்துள்ளார்.

வரும் 18ம் தேதி ரிலீஸ் ஆகும் இந்த படத்தின் ப்ரமோஷன் பணிகள் படு ஜோராக நடந்து கொண்டிருக்கிறது. அப்போது பேசிய உதயநிதி கலகத்தலைவர் படத்தில் இடம் பெற்றிருக்கும் முத்தக் காட்சியை கண்டு தெரிந்து ஓடியதாக வெளிப்படையாக பேசி உள்ளார். அதன் பிறகு படக்குழு வேறு வழியில்லாமல் கேமராவை வெவ்வேறு கோணங்களில் மாற்றி எடுத்து அந்த காட்சியை எடுத்துள்ளனர்.

Also Read: என்ன மீறி படத்தை ரிலீஸ் பண்ணிடுவியா.. விஜய்க்கு உதயநிதி போடும் ஸ்கெட்ச்

இந்தப் படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு காட்சிகள் குறைவுதானாம். இதில் பிக் பாஸ் பிரபலம் ஆரோவ் மற்றும் கலையரசன் உள்ளிட்டோரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். பெரும்பாலும் ஆரவுக்கு தான் இந்த படத்தில் நிறைய காட்சிகள் இருக்கிறது என்று உதயநிதி கூறியுள்ளார்.

மேலும் கிரிஞ், பூமர் போன்ற சொற்களுக்கு எல்லாம் தனக்கு அர்த்தமே தெரியாது என்றும், ஒரு முறை மாரி செல்வராஜ் உடன் சேர்ந்து படம் பார்க்கும்போது கிரிஞ் காட்சி வந்ததாக அவர் சொல்லியிருக்கிறார். இதை பற்றி எதுவும் தெரியாத உதயநிதி, திரு திருவென முழித்திருக்கிறார்.

இதைப் பற்றி உங்கள் மகளிடம் கேளுங்கள் என்றும் மாரி செல்வராஜ் சொல்லி இருக்கிறார். அதன் பிறகு ஒரு முறை வீட்டில் உதயநிதியின் மனைவி கிருத்திகாவை அவருடைய மகள் ‘பூமர் அம்மா’ என்று அழைத்திருக்கிறார்.

Also Read: தமிழ் சினிமாவில் நடித்த 5 முக்கிய அரசியல் தலைவர்கள்.. விஜயகாந்துடன் இணைந்து நடித்த முதல்வர் ஸ்டாலின்

அப்படி என்றால் முன்பு நடந்த பழைய கதையை கூறியதால் பூமர் அம்மா என்று கிண்டல் செய்துள்ளார். இப்படி அப்பாவை மிஞ்சிய மகளாக உதயநிதியின் மகள் இருப்பதை அந்த ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலகலப்புடன் பகிர்ந்திருக்கிறார்.

Trending News