திங்கட்கிழமை, டிசம்பர் 30, 2024

மைண்ட் வாய்ஸ்னு நினைச்சு ஓபனாக பேசிவிட்டார்.. மொத்தத்திற்கும் அந்த நடிகர் தான் காரணம் என கூறிய உதயநிதி

Actor Udhayanidhi: உதயநிதி நடிகராகவும், தயாரிப்பாளராகவும் பல திறமைகளை வைத்துக்கொண்டு சினிமாவில் உலா வருகிறார். அந்த வகையில் தற்போது அரசியலில் ஈடுபட்டுள்ளதால் இனி படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் குறைவு தான் என்று ஏற்கனவே இவருடைய கருத்தை வெளியிட்டு இருக்கிறார். அத்துடன் இவரைப் பொறுத்தவரை மனதில் என்ன தோன்றுகிறதோ அதை எல்லா பேட்டிகளிலும் தெளிவாக சொல்லிவிடுவார்.

அந்த வகையில் இவர் அளித்த பேட்டி ஒன்றில் என்னையெல்லாம் நடிகராக மக்கள் ஏற்றுக் கொண்டதற்கு முக்கிய காரணம் ஒரு நடிகர்தான் என்று வெளிப்படையாக பேசி இருக்கிறார். நான் முதலில் சினிமாவில் நடிப்பேன் என்று கொஞ்சம் கூட யோசித்து பார்த்ததே இல்லை. ஒரு சில காட்சிகளில் நடித்த பொழுது எனக்கு நடிப்பின் மீது ஆர்வம் கூடிவிட்டது.

Also read: இந்தியன் 2 படத்தில் சூதனமான உதயநிதி.. மொத்தமாக இடி விழுந்தது போல் நொறுங்கிய ஷங்கர்

மேலும் நான் தயங்கி தயங்கி தான் என்னுடைய முதல் படத்தை நடிக்க ஆரம்பித்தேன். ஆனால் அந்த படம் எதிர்பார்ப்பையும் தாண்டி மிகப்பெரிய ஹிட் ஆனது. அந்த வெற்றியால் எனக்கு புது நம்பிக்கை பிறந்தது. மேலும் நான் இந்த அளவுக்கு வளர்ந்ததற்கு காரணம் அந்த நடிகர்.அவர் இல்லை என்றால் நான் இப்பொழுது ஒரு நடிகனாக உங்கள் அனைவரது முன்னாடியும் இருந்திருக்க முடியாது.

இது எல்லாத்துக்கும் காரணம் என்னுடைய நண்பராக எனக்கு முதலில் அறிமுகமான நடிகர் சந்தானம் தான். அவர்தான் எனக்கு யானை பலத்தை கொடுத்தார். எனக்கு நடிப்பு சுட்டு போட்டாலும் வராது. அந்த சமயத்தில் ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் நடிக்கும் போது, சந்தானம் எல்லா காட்சியும் அசால்ட்டாக நடித்துக் கொடுத்துருவார்.

Also read: மாமன்னனில் தண்டத்துக்கு வந்து போன கீர்த்தி சுரேஷ்.. வசனமே இல்லாமல் ஸ்கோர் செய்த கேரக்டர்!

ஆனால் எனக்கு தான் அதிக டேக் போய்க் கொண்டே இருக்கும். இந்த சமயத்தில் சந்தானம் தான் பல விஷயங்களில் எனக்கு உதவி செய்து இருக்கிறார். இதனைத் தொடர்ந்து அவருடன் நிறைய படங்கள் நடித்து ஒரு நடிகனாக தற்போது வளர்ந்திருக்கிறேன். இப்படி ஒவ்வொரு விஷயத்தையும் சந்தனத்தை தூக்கி வைத்து பேசி இருக்கிறார்.

மேலும் இப்பொழுது கூட மாமன்னன் படத்தில் என்னுடைய நடிப்பை விட பகத் பாசில் தான் நன்றாக நடித்திருப்பார் என்று கூறியிருக்கிறார். இவர் சொல்கிறது அனைத்துமே உண்மைதான். சந்தானம் இவருக்கு மிகப்பெரிய தூணாக இருந்திருக்கிறார். ஆனால் இதையெல்லாம் சொல்றதுக்கு மிகப்பெரிய மனசு வேணும். அதுதான் இவர் வளர்ந்ததற்கு கூட ஒரு காரணம்.

Also read: மாமன்னன் பட ஹீரோ உதயநிதியா, பகத் பாசிலா.? பாவம் மாரி செல்வராஜே கன்பியூஸ் ஆயிட்டாரு

Trending News