திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

விஜய்யை ஒட்டுமொத்தமாக முடக்க நினைக்கும் உதயநிதி.. லியோவுக்கு போட்டியாக இறங்கும் பிரம்மாண்ட படம்

ஆரம்ப காலங்களில் விஜய் மற்றும் உதயநிதி இருவரும் நண்பராக பழகி வந்தனர். ஆனால் உதயநிதி எப்போது அரசியலுக்கு வந்தாரோ அப்போதிலிருந்தே விஜய்யை எதிரியாக பார்ப்பதாக ஒரு தரப்பு கூறப்படுகிறது. அதாவது வருங்காலத்தில் விஜய் அரசியலுக்கு வந்து விடுவாரோ என்ற பயம் தான் என கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

அதேபோல் வாரிசு படத்தை உதயநிதியிடம் கொடுக்க விஜய்க்கு மனம் இல்லாமல் லலித்திடம் கொடுத்தார். ஆனால் தமிழ் சினிமாவில் உதயநிதி நினைத்தால் மட்டுமே படம் வெளியிட முடியும் என்ற சூழ்நிலை உள்ளதால் சென்னையில் முக்கிய இடங்களில் வாரிசு படத்தை உதயநிதி வெளியிட்டார்.

Also Read : கோலிவுட்டில் விஜய்க்கு 3வது இடம் தான்.. பெரும் பரபரப்பை கிளப்பிய பிரபலம்

வாரிசு படத்தின் வசூலை முறியடிக்க வேண்டும் என்று அஜித்தின் துணிவு படத்தையும் அதே நாளில் உதயநிதி வெளியிட்டிருந்தார். அவர் நினைத்தது போல தமிழ்நாட்டை பொறுத்தவரையில் வாரிசை காட்டிலும் துணிவு படம் தான் அதிக வசூல் பெற்றது. இப்போது லோகேஷ் கனகராஜ், விஜய் கூட்டணியில் லியோ படம் உருவாகி வருகிறது.

இந்த படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித் தான் தயாரிக்கிறார். லியோ படத்தின் டைட்டில் ப்ரோமோவில் இப்படம் செப்டம்பர் 11ஆம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிப்பு வெளியானது. இதனால் விஜய்யின் கேரியரை ஒட்டுமொத்தமாக முடக்க நினைக்கும் உதயநிதி லியோ படத்திற்கு போட்டியாக பிரம்மண்ட படத்தை வெளியிட உள்ளார்.

Also Read : அஜித், விஜய்க்கு போட்டியாக களம் இறங்கிய தனுஷ்.. வாத்தி வசூலை குவிக்க போட்டிருக்கும் திட்டம்

அதாவது ஏற்கனவே வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் வருகின்ற ஏப்ரல் மாதம் 28ஆம் தேதி ரிலீஸாக உள்ளதாக அறிவிப்பு வெளியானது. ஆனால் இப்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளிப் போட உதயநிதி முடிவெடுத்து உள்ளாராம்.

ஏனென்றால் விஜய்யின் லியோ படத்திற்கு போட்டியாக பொன்னியின் செல்வன் 2 படத்தை வெளியிட உள்ளாராம். அப்போது தான் லியோ படத்தின் வசூல் பாதிப்பு ஏற்படும் என்ற திட்டத்தில் உதயநிதி இவ்வாறு யோசித்துள்ளதாக சினிமா விமர்சகர் அந்தனன் ஒரு யூடியூப் சேனலில் கூறியுள்ளார்.

Also Read : பல கோடி பிசினஸ் இருக்கும் இடத்தில் நேர்மை இருக்காது.. அஜித், விஜய்யை குத்தி காமிச்ச ஹெச்.வினோத்

Trending News