விஜய்க்கு குடைச்சல் கொடுக்கும் உதயநிதி.. விரலை வைத்தே கண்ணை குத்திய சம்பவம்

Vijay: விஜய் அரசியலில் நுழைந்ததில் இருந்தே ஏகப்பட்ட பிரச்சனைகளை சந்தித்து வருகிறார். சாதாரணமாக ஒரு மாநாடு நடத்துவதில் கூட பல சிரமங்கள் வருகிறது. வேண்டுமென்றே பலர் பிரச்சனை உண்டாக்குவது, கரண்டை கட் செய்வது போன்ற வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இப்போது விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் படத்திலும் சூழ்ச்சி நடந்து இருப்பதாக கூறப்படுகிறது. வினோத் இயக்கத்தில் உருவாகும் இந்த படம் அரசியல் சார்ந்த கதைகளத்தில் உருவாகி இருக்கிறது.

இந்த சூழலில் அண்மையில் ஜனநாயகம் படம் வருகின்ற 2026 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸாக உள்ளதாக போஸ்டர் வெளியானது. இதை அடுத்து சிவகார்த்திகேயனின் பராசக்தி படமும் அன்றுதான் வெளியாக இருக்கிறது.

வளர்ந்து வரும் நடிகராக இருக்கும் சிவகார்த்திகேயனுக்கும் இப்போது ரசிகர்கள் அதிகமாக இருப்பதால் ஜனநாயகன் படத்திற்கு வசூல் ரீதியாக சிக்கல் வர வாய்ப்பு இருக்கிறது. மேலும் இந்த படத்திற்கு போட்டியாக பராசக்தி வெளியிட உதயநிதி தான் காரணம் என்று சொல்லப்படுகிறது.

விஜய்யின் படத்திற்கு பிரச்சனை கொடுக்கும் உதயநிதி

ஏனென்றால் பராசக்தி படத்தை டான் பிக்சர்ஸ் தயாரித்து உள்ள நிலையில் உதயநிதியின் ரெட் ஜெயண்ட் தான் விநியோகம் செய்ய உள்ளது. விஜய்க்கு குடைச்சல் கொடுக்க வேண்டும் என்பதற்காகத் தான் பொங்கல் பண்டிகையை தேர்ந்தெடுத்துள்ளார்கள்.

அதோடு பராசக்தி படத்தின் கதை 60களில் ஹிந்தி திணிப்பை எதிர்த்து திமுக போராட்டம் செய்த கதை களமாகும். அதோடு மட்டுமல்லாமல் சிவாஜி கணேசன் நடிப்பில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி வசனம் எழுதிய படத்தின் டைட்டிலும் பராசக்தி தான்.

மேலும் பராசக்தி படத்திற்கு அதிக திரையரங்குகள் உதயநிதி ஒதுக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. இதனால் ஜனநாயகன் படத்திற்கு தியேட்டர் கிடைப்பதிலும் சிக்கல் உள்ளது.

விஜய்யின் இடத்திற்கு சிவகார்த்திகேயன் அடுத்ததாக வருவார் எனக் கூறப்படுகிறது. கோட் படத்திலும் சிவகார்த்திகேயன் கேமியோ தோற்றத்தில் நடித்திருந்தார்.

விஜய்யின் வலதங கையாக இருந்த சிவகார்த்திகேயனை அவர் கண்ணிலேயே குத்துபடி தான் இந்த சம்பவம் இருக்கிறது. சமீபத்தில் திமுகவை எதிர்த்து விஜய் வீடியோ வெளியிட்டது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

ஆகையால் விஜய்யை நேரடியாக உதயநிதி பராசக்தி படத்தின் மூலம் எதிர்க்கிறார் என்று வலைப்பேச்சு விமர்சகர்கள் கூறி இருக்கின்றனர்.

Advertisement Amazon Prime Banner

Leave a Comment