புதன்கிழமை, ஜனவரி 15, 2025

போலீஸ் கேசால் விழி பிதுங்கி நிற்கும் அமீர்.. கிரேட் எஸ்கேப் என ஜகா வாங்கிய உதயநிதி

Ameer: தமிழ் சினிமாவில் போதை கலாச்சாரம் சம்பந்தப்பட்ட படங்கள் அதிகமாக வெளிவர தொடங்கியது. படம் தான் அப்படி என்று பார்த்தால் இப்போது தமிழ் சினிமாவை சேர்ந்தவர்களே போதை வழக்கில் சிக்கிக் கொள்கிறார்கள்.

தமிழ் சினிமா தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் போதை வழக்கில் சிக்கியதோடு மட்டுமல்லாமல், அந்தக் கடத்தலுக்கே தலைவர் இவர்தான் என்றெல்லாம் சொல்கிறார்கள். இவர் கைதான போது தமிழ் சினிமாவின் பல பிரபலங்கள் இதில் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இதுவரை இந்த வழக்கு சம்பந்தமாக வேறு எந்த விஷயமும் வெளிவரவில்லை. ஜாபர் சாதிக் உடன் நெருக்கமாக இருந்தவர்களிடம் சிபிசிஐடி போலீஸ் விசாரணை நடத்தியது. இதில் இயக்குனர் அமீர் ஒருவர். அமீர், ஜாபர் சாதிக்குடன் ரொம்ப நெருக்கமான உறவில் இருந்ததால் அவர் அடுத்தடுத்த விசாரணைக்கு சென்று வருகிறார்.

ஜகா வாங்கிய உதயநிதி

இந்த வழக்கு விசாரணையால் அமீரின் படம் ஒன்று ரிலீஸ் ஆவதில் பெரிய பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது. அமீர் இயக்கி நடித்த மாயவலை படம் ரிலீஸ் ஆவதில் தான் பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது. இந்த படத்தை அமீர் மற்றும் வெற்றிமாறன் இணைந்து தயாரித்திருந்தார்கள்.

ஆர்யாவின் தம்பி சத்யா, வின்சென்ட் செல்வா ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்கள். மாயவலை படத்தின் டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்தப் படத்தின் கடைசி 30 நிமிஷம் கிளைமாக்ஸ் சிறப்பாக இருக்கிறதாம்.

இதை பார்த்துவிட்டு இந்த படத்தை உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய ரெட் ஜெயன்ட் மூவிஸ் மூலம் ரிலீஸ் செய்ய இருந்திருக்கிறார். ஆனால் அதற்குள் அமீர் இந்த போலீஸ் கேசில் சிக்கிக் கொண்டதால் ஜகா வாங்கி விட்டார் விளையாட்டுத்துறை அமைச்சர். இதனால் இந்த படத்தின் ரிலீஸ் தற்போது கேள்விக்குறியாக இருக்கிறது.

Trending News