2023 இல் வெளிவந்த மாமன்னன் படத்தோடு சினிமா கேரியரை முடித்துக் கொண்டார் உதயநிதி ஸ்டாலின். அதன் பின் முழு நேர அரசியல்வாதியாக இன்று மக்களுக்காக உழைத்துக் வருகிறார். விளையாட்டுத்துறை மந்திரியாக இருக்கும் இவர் இப்பொழுது தன்னுடைய சினிமா இடத்திற்கு ஒருவரை வளர்த்து வருகிறார்.
2009ஆதவன் படத்தில் ஒரு சின்ன கெஸ்ட் ரோலில் அறிமுகமான இவர், அதன் பின் 2012 ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் ஹீரோ ஆனார். கிட்டத்தட்ட 10 வருடங்கள் தமிழ் சினிமாவில் நடிகராக வலம் வந்த இவர் இப்பொழுது முழு நேர அரசியல்வாதியாக தன்னை மாற்றிக் கொண்டார்.
உதயநிதி ஸ்டாலின் இடத்தை இப்பொழுது அவர்களது ஒட்டுமொத்த குடும்பமும் அருள்நிதியை வைத்து பூர்த்தி செய்து வருகிறது. பல படங்களை தன்னுடைய தம்பி அருள்நிதிக்காக சிபாரிசு செய்து வருகிறார் உதயநிதி. தனக்காக கதை சொல்லிய புது இயக்குனர்களை அருள்நிதி இடம் அனுப்பி வைக்கிறார் உதயநிதி.
இறங்கி அடிக்கும் அதிவீரன்
டிமான்டி காலனி இரண்டாம் பாகம் அடித்த அதி ரிபுதிரி ஹிட்டால் அருள்நிதி கைவசம் படங்கள் குவிந்து வருகிறது. சமீபத்தில் கூட அந்த படம் 25 நாட்களை கடந்தது உண்மையான சக்சஸ் மீட்டை கொண்டாட வைத்தது. இப்பொழுது முன்பு உதயநிதி கேட்ட கதைகளை எல்லாம் அருள்நிதி கேட்டு வருகிறார்
டிமான்டி காலனி 2 படத்திற்கு பிறகு மூன்று படங்களில் புதிதாய் கமிட் ஆகியுள்ளார் அருள்நிதி. தமிழில் ஏற்கனவே வெளிவந்த படம் பம்பர். 2023ஆம் ஆண்டு இயக்குனர் செல்வகுமார் இந்த படத்தை இயக்கினார்.இப்பொழுது அவருடன் இணைந்து ஒரு பெரிய பட்ஜெட் படத்தில் நடிக்கிறார் அருள்நிதி.
- உதயநிதியை போல் உருவாகும் அடுத்த வாரி
- ஞ்சாயத்து குறித்து மௌனம் கலைத்த உதயநிதி
- விஷால், உதயநிதியை சேர்த்து அசிங்கப்படுத்திய மேடை