திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

விநியோகஸ்தர்களால் அசிங்கப்படும் உதயநிதி.. எவ்வளவு சொல்லியும் கேட்காமல் ஒதுக்கும் கும்பல்

வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வாரிசு திரைப்படம் உருவாகி இருக்கிறது. வரும் பொங்கலுக்கு வெளியாக இருக்கும் இந்த திரைப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. ஏற்கனவே இப்படத்தின் போஸ்டர், ஃபர்ஸ்ட் சிங்கிள் அனைத்தும் வைரலான நிலையில் தற்போது துணிவு திரைப்படமும் பொங்கலுக்கு களம் இறங்க இருப்பது உச்சகட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் இந்த திரைப்படத்தின் வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலின் கைப்பற்றி இருக்கிறார். அது மட்டுமல்லாமல் வாரிசு படம் வெளியாகும் அதே நாளில் இப்படம் வெளியாகும் என அவர் அறிவித்தது மிகப்பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

Also read: விஜய் ஓட சேர்ந்த நேரம் 2 சிக்கலில் மாட்டிய ராஸ்மிகா.. கிரஷ் நடிகைக்கு இப்படி ஒரு அவப்பெயரா?

ஏனென்றால் வாரிசு திரைப்படத்தின் உரிமை கிடைக்காததால் தான் அவர் துணிவு திரைப்படத்தை பொங்கலுக்கு வெளியிடுவதாகவும் இதன் மூலம் வாரிசு படத்திற்கு தியேட்டர்கள் கிடைக்காமல் நஷ்டம் ஏற்படும் என்றும் பல செய்திகள் உலா வந்து கொண்டிருக்கிறது. மேலும் துணிவு திரைப்படத்திற்கு மட்டுமே தியேட்டர்கள் கிடைக்க வேண்டும் என்று அவர் சில வேலைகளை செய்து வருவதாகவும் தவறான செய்திகள் பரவி வருகின்றது.

ஆனால் உண்மையில் இந்த இரண்டு படங்களுக்கும் சரிசமமாக தியேட்டர்கள் ஒதுக்க வேண்டும் என்பதுதான் உதயநிதியின் எண்ணம். இது ஒரு புறம் இருக்க மறுபுறம் தமிழ்நாடு முழுவதும் உள்ள விநியோகஸ்தர்கள் துணிவு திரைப்படத்திற்காக மட்டுமே தியேட்டர்களை புக் செய்து வருகிறார்களாம்.

Also read: அஜித்தை மந்திரிச்சி விட்ட ரஜினி.. மீண்டும் நடக்கப்போகும் சந்திப்பு

அதுவும் உதயநிதி பெயரை சொல்லித்தான் அவர்கள் இப்படி ஒரு செயலில் ஈடுபட்டு கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. எதற்காக அவர்கள் இப்படி செய்கிறார்கள் என்பது தெரியவில்லை. ஆனால் இதன் மூலம் வாரிசு திரைப்படத்திற்கு கணிசமான அளவு தியேட்டர்கள் குறைந்து இருப்பது உண்மை.

இது உதயநிதிக்கு தெரிந்தும் விநியோகஸ்தர்கள் மூலம் பணம் கிடைப்பதால் அவர் அமைதியாக இருக்கிறார் என்ற ஒரு பேச்சும் அடிபட்டு வருகிறது. இவை அனைத்தும் தற்போது உதயநிதியின் கவனத்திற்கு சென்றிருப்பதால் விரைந்து அவர் இந்த பிரச்சனையை தீர்ப்பார் என்று கூறுகின்றனர். அப்பொழுதுதான் அவர் மீது இருக்கும் இந்த கெட்ட பெயர் நீங்கும் என்று சினிமா தயாரிப்பாளர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

Also read: விஜய் வாரிசுக்கு அதிர்ச்சி நோட்டீஸ்.. திருட்டுத்தனமாக படக்குழு செய்த வேலையால் தலைகுனித்த தளபதி

Trending News