செவ்வாய்க்கிழமை, ஜனவரி 14, 2025

பல சேனல்களுக்கு வாரி வழங்கும் உதயநிதி.. பினாமி யார் என வெளிச்சம் போட்டு காட்டிய பிரபலம்

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் இன்று கண்ணை நம்பாதே படம் வெளியாகி உள்ளது. இதைத் தொடர்ந்து அவரது நடிப்பில் கடைசியாக மாமன்னன் படம் வெளியாக உள்ளது. இத்துடன் சினிமாவுக்கு முழுக்கு போட்டுவிட்டு முழு வீச்சாக அரசியலில் செயல்பட இருக்கிறார். ஆனாலும் உதயநிதி பல தொழில்களில் முதலீடு செய்து வருகிறார்.

அந்த வகையில் தமிழ் சினிமாவில் முன்னணி விநியோகஸ்தராக வளம் வந்து கொண்டிருக்கிறார். தனது ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தின் மூலம் டாப் நடிகர்களின் படங்கள் வினியோகம் செய்கிறார். அதுமட்டுமின்றி தற்போது அதிக வருமானம் ஈட்டி தருவது யூடியூப் சேனல்கள் தான்.

Also Read : உதயநிதியின் கண்ணை நம்பாதே எப்படி இருக்கு.? கொட்டும் மழையில் வெளிவந்த ட்விட்டர் விமர்சனம்

ஆகையால் பல யூடியூப் பிரபலங்களுக்கு உதயநிதி கேமரா போன்ற தொழில்நுட்ப சாதனங்களை வாங்கி கொடுத்துள்ளாராம். அவர்களிடம் திமுகவுக்கு ஆதரவாகவும், திமுகவை எதிர்த்து பேசுபவர்களை திட்டவும் செய்ய வேண்டும் என்ற உதயநிதி கூறியுள்ளதாக பிரபலம் ஒருவர் கூறியுள்ளார்.

இதில் குறிப்பாக பிளாக் ஷீப் யூடியூப் சேனல் ஆரம்பத்தில் கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி ஆகியோரை கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. ஆனால் இப்போது இந்த யூடியூப் சேனலை உதயநிதி வாங்கி சித்திரம் தொலைக்காட்சிக்கு பதிலாக பிளாக் ஷீப் சேனலை ஒளிபரப்புகிறார். எப்படி பிளாக் ஷீப்புக்கும் உதயநிதிக்கும் உறவு வந்தது என்பதை சாட்டை துரைமுருகன் கூறியுள்ளார்.

Also Read : உதயநிதிக்கு நல்ல பிசினஸ் கொடுத்த ஒரே படம் .. நடித்த 17 படத்தில் கெத்து காட்டிய வசூல்

அதாவது விக்னேஷ் காந்த் தனது யூடியூப் சேனலுக்கு ஜிஎஸ்டி கட்டவில்லை என்றும், பல பேரிடம் மரம் நடுவதாக பணம் வாங்கியதாகவும் அவர் மீது குற்றச்சாட்டு உள்ளது. ஆகியவற்றில் இருந்து தப்பிப்பதற்காக உதயநிதியின் பினாமியாக விக்னேஷ் காந்த் செயல்பட்டு வருகிறார். மூன்று வருடத்திற்கு முன்பு கலைஞரை மோசமாக விமர்சித்த இவர் சித்திரம் லைசன்ஸ் மூலம் தனது பிளாக் ஷீப் டிவியை நடத்தி வருகிறார்.

விக்னேஷ் காந்த் போன்று பணத்திற்காக விலை போனவர்களை பற்றி பேச இங்கு யாரும் முன்வருவது இல்லை என்று கடுமையாக சாடியுள்ளார் சாட்டை துரைமுருகன். இவர் பேசியதற்கு தற்போது உதயநிதியின் ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு நிலவி வருகிறது.

Also Read : ஒரு லிமிட் மெயின்டெயின் பண்ணும் உதயநிதி.. இன்று வரை விஜய் உடன் நெருங்காத ரகசியம்

Trending News