புதன்கிழமை, ஜனவரி 15, 2025

சேட்டன்கள் தொல்லை தாங்க முடியவில்லை.. உதயநிதி களத்தில் இறக்கப் போகும் அடுத்த பிளாக்பஸ்டர்

Udhayanidhi’s will release next blockbuster malayalam movie: தமிழன், தமிழ் படங்கள் என்று மார்தட்டி கொண்டாலும் பிற மொழிகளில் சிறந்த திரைக்கதையுடன் வரும் படங்களை கொண்டாட தவறுவதில்லை நம் தமிழ் ரசிகர்கள். அந்த வகையில் குறைவான பட்ஜெட்டில் மலையாளத்தில் எடுக்கப்படும் திரைப்படங்கள் இங்கு வசூலில் சக்கை போடு போட்டு வருகிறது. 

இந்த ஆண்டு மலையாள சினிமாவிற்கு ஒரு புது வளர்ச்சிகரமான தொடக்கத்தை தந்துள்ளது எனலாம். மம்மூட்டி நடிப்பில் வெளியான பிரம்மயுகம், சிதம்பரம் இயக்கத்தில் மஞ்சுமல் பாய்ஸ் என 20 கோடி முதல் 30 கோடி வரை குறைவான குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்படும் படங்கள், வசூலில் 100 கோடியை தாண்டி சாதனை செய்து வருகிறது.

கடந்த மாதம் வெளியான மஞ்சுமல் பாய்ஸ் தமிழ்நாட்டில் எதிர்பார்க்காத அளவு வெற்றியடைந்ததுடன், சினிமா ஆர்வலர்களை நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் விமர்சிக்க வைத்து விட்டது.

உலகநாயகன் கமலஹாசன் படங்களுக்கு என்றுமே அழிவில்லை என்பதை நிரூபிக்கும் வண்ணம் வெளிவந்தது மஞ்சுமல் பாய்ஸ். 

1991 ஆண்டு வெளிவந்த குணா படத்தின் மூலம் பிரபலமான குணா குகை தான் இப்படத்தின் மையக் கரு. இத்திரைப்படத்தை அன்று கொண்டாடாத நம் தமிழ் ரசிகர்கள் 33 வருடங்களுக்குப் பின் கமலையும், இயக்குனர் சந்தான பாரதியையும் கொண்டாடி மகிழ்கின்றனர். படிப்படியாக உயர்ந்த மஞ்சமல் பாயஸ்ஸின் வசூல் சினிமா ஆர்வலர்களை வாய்ப்பிளக்க வைத்தது.

ஒரு பக்கம் மஞ்சுமல் பாய்ஸின் குழு கமல், சந்தான பாரதி அவர்களை சந்தித்து ஆசி பெற, மறுபக்கம் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து அளவளாக, இங்கிருக்கும் சினிமா ஆர்வலர்களுக்கு பத்திக் கொண்டுதான் போனது.

உதயநிதியின் அடுத்த படம்

இப்போது மஞ்சுமல் பாய்ஸின் வெற்றியை உடைக்க அடுத்து ஒரு படத்தை களம் இறக்கப் போகிறார் உதயநிதி. ஆம் மலையாளத்தில் கிரிஷ் இயக்கத்தில் மமிதாபைஜு, நஸ்லேன் நடித்து காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாகி வசூலில் சக்கை போடு போட்ட படம் தான் பிரேமலு.

மலையாள சினிமாவையே கலக்கிய இத்திரைப்படம் தெலுங்கில் டப் செய்யப்பட்டு அங்கேயும் மாபெரும் வெற்றி பெற்றது. உலக அளவில் 100 கோடியை தாண்டி பாக்ஸ் ஆபீஸை தெறிக்க விட்டது.

இப்படத்தை தமிழில் டப் செய்து உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் மார்ச் 15 அன்று வெளியிட உள்ளது. தமிழ், தெலுங்கு எங்கும் சேட்டன்களின் ஆதிக்கமே நிறைந்து உள்ளது.

Trending News